ஒம் அண்ணண் பிரபாகரன் தீவீரவாதி
1.இளமை நாளின் கனவுகளை சுமந்து பட்டாம்பூச்சி போல சிறகடித்து பறந்து திரிய வேண்டிய 17 வயதில் ஒரு ஓட்டை துப்பாக்கியுடன் ஆரம்பித்த இயக்கத்திற்கு தரை,கடல்,வான்,என்று ஒரு சாம்ராஜியத்தையே கட்டமைக்க எந்த நாட்டு அதிபர் எங்கள் அண்ணணுக்கு ஆலோசனைகளை வழங்கினான் ???
2.எந்தநாட்டு கப்பற்படைத் தலைவன் எங்களுக்கு நீர்மூழ்கி கப்பலை வடிவமைக்க கற்றுக்கொடுத்தான் ??? அந்த நீர்மூழ்கி கப்பலை இயக்க எந்த நாட்டு மாலுமி எங்களுக்கு பயிற்சி அளித்தான் ???
3.இத்தனை சிறிய வன்னிநிலப்பரப்பில் இத்தனை விமான ஓடுதளங்களை எந்த நாட்டு பொறியியலாளன் வந்து அமைத்துக் கொடுத்தான் ???
4.இத்தனை சிறிய நிலப்பரப்பில் இத்தனை ரேடார் கருவிகள் அந்த நிலத்தையே உற்று நோக்கி கொண்டிருந்த போதிலும் அதுகளின் கண்ணில் மண்ணை தூவி எதிரியின் தலைநகரில் தாக்குதல் நடத்திட்டு பாதுகாப்பாக தளம் திரும்ப எந்த நாட்டு விமானி எங்கள் வான் புலிகளுக்கு பயிற்சி அளித்தான் ???
5.உரிமைக்காக ஆயுதம் ஏந்தி போராடுகின்ற விடுதலை அமைப்புகளில் எந்த நாட்டு விடுதலை அமைப்பு யுத்தத்தில் வீரமரணம் அடைந்தவர்களை துயிலும் இல்லம் அமைத்து வருடா வருடம் நினைவு கூர்ந்து பராமரித்தது ???
6.உயிரையே ஆயுதமாக்கி தரையிலும் கடலிலும் வானிலும் வெடி மருந்து சுமந்து வெடிக்க எந்த நாட்டு போராளி அவனுக்கு அந்த பயிற்சி அளித்தான் ???? ஆர் அவர்களுக்கு அந்த மன உறுதியை தந்தான் ???
7.விடுதலைக்காக போராடுகின்ற விடுதலை அமைப்புகளில் எந்த நாட்டுக்கு தனக்கென தொலைகாட்சி உரிமம்,மற்றும் போரில் காயமுற்றவர்களுக்கான தனி மருத்துவ பணிமனை,மற்றும் போரில் பெற்றோர்களை இழந்த பிள்ளைகளுக்கு இல்லம் அமைத்து பராமரித்து பாதுகாத்தது ???
8.அட இவ்வளவு ஏன் சகல பாதுகாப்போடு வழங்கல் உதவியுடன் 20,000 மேற்பட்ட. இராணுவ வீரர்களை கொண்டிருந்த அசைக்க முடியாத தளமாக விளங்கிய ஆனையிறவு படைத் தளத்தை வெறும் 800,900 போராளிகளை வைத்துக்கொண்டு நாங்கள் கைப்பற்ற எந்த நாட்டு இராணுவ மேதை எங்களுக்கு தாக்குதல் திட்டத்தை வரைந்து விளக்கி வழி நடக்க பயிற்சி அளித்தான் ???
9.இப்படி ஆயிரம் கேள்விகளை உங்கள் முன்னால் என்னால் விரிக்க முடியும்.
ஆனால் அந்த ஆயிரம் கேள்விகளுக்கும் ஒரேயொரு ஒற்றை வார்த்தைதான் பதிலாக இருக்க முடியும்
பிரபாகரன்
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
பிரபாசெழியன்.