ஒற்றையாட்சிக்குள் பௌத்தத்திற்கு முன்னுரிமை –தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு –லக்ஸ்மன் கிரியல்ல!

ஒற்றையாட்சிக்குள் பௌத்த மதத்திற்கு முன்னுரிமையளிக்கவும், வடக்குக் கிழக்கு இணைப்பைக் கைவிடுவதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

நீண்ட காலத்திற்குப் பின்னர் நாட்டின் அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கக்கூடிய சூழல் எழுந்துள்ளது.

புதிய அரசியலமைப்புத் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பரப்பப்பட்டு வருகின்றது. இவையனைத்தும் பொய்.

அரசமைப்பு தொடர்பான அறிக்கை தயாரிக்கப்பட்டு அது நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும். பின்னர் மகாநாயக்க தேரர்களின் கருத்துகள் கோரப்படும்.

எனவே, நீண்டகாலத்துக்குப் பின்னர் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசமைப்பொன்றை உருவாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் லக்ஸமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.