images (5)

எனது புதல்வர்களிடம் போய் கண்ணீர்கொட்ட வேண்டும், (துயிலும்இல்லம்)இழந்த தேசம் கிடைக்கவேண்டும்…

111

ஓட்டைவீட்டில் உறங்கும் இரண்டு மாவிரர்களின் தாயின் அவள நிலை பாருங்கள் அன்று இரண்டு புதல்வர்ளை அள்ளித்தந்த இந்த தாய் இன்று படும் அவள நிலை யாருக்குத்தெரியும்?

Fotor1223114050
இரண்டு வித்துக்களை அள்ளித்தந்துவிட்டு இன்று ஒரு” நேர சாப்பாட்டுக்கு படும் துன்பம். சென்று பார்த்போது”கண்ணீர் கொட்டியது.கொட்டும் மழையில் தனது படுக்கையும் பட்டினியும்.சுமக்கின்றாள் இந்த வீரத்தாய். Fotor122311400இந்த அரசாங்கத்துக்குத் தெரியாமலாபோனது? அல்லது இரண்டு பேரை இந்த நாட்டுக்கு தந்ததுக்கு தண்டனையா இது? தனி ஒரு தாய் ஒரு”சிறிய மகன் வயது 16 ….. அவன் படிப்பதா? அல்லது அம்மாவின் வாழ்க்கையைப்பார்ப்பதா
இன்று அவள நிளைக்குள்ள தாயைக்கண்டு கண்ணீர் வடிக்கவேண்டியதாயிற்று. தன்னுடைய”பிள்ளைகளின் புகைப்படத்தை சுவற்றில்”வைத்து நித்தமும் கண்ணீர் வடித்து தனது வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கும் இந்த தாய்க்கு நாங்கள் என்ன செய்யப்போகுன்றோம்?

எமது தலைவர் இருந்திருந்தாள் இப்படியா இந்த தாய் இருந்திருப்பாள்?
இன்னும் சில கால நீடிக்குமாக இருந்தால் இருவரின் வாழ்கையும் கேள்விக்குறியாகவே இருக்கும். என்ன செய்ய போகின்றீர்கள் என்று கேட்டதுக்கு. எனது புதல்வர்களிடம் போய் கண்ணீர்கொட்ட வேண்டும், (துயிலும்இல்லம்) இழந்த தேசம் கிடைக்கவேண்டும் என்று கண்ணீருடன் பதில் கிடைத்தது. அதற்காக தன்னுடைய அடுத்த மகனையும் இந்த மண்ணுக்காக தருவேன் என்றார். என் நெஞ்சு வெடித்ததுபோல் இருந்தது. இன்னும் எமது மாவீரக்குடும்பமும் சரி போராளிகுடும்பமும் சரி உறுதியுடன்தான் இருக்கின்றார்கள். எமது தேசம் என்றாவது விடியும் என்றநம்பிக்கையில். அந்த தாய்க்கு இருக்கும் வீரம் போற்றக்குடியது. வருமையிலும். எமது இலச்சியத்தை விடவில்லை. அவரின் புகைப்படத்தை பதிவு எற்றவா எனக்கேட்டபோது. எனக்குப்பிரச்சீனை இல்லை எனது அடுத்த மகனுக்கு பிரச்சினை வரும் என்று கூறி னார்.
நன்றி தாயே உன் வறுமையிலும் எமது இலச்சியத்தை உன் இருதயத்தில் இருந்து அகற்றவில்லை. என்வீரத்தாய்கு எமது பாராட்டுக்கள். உங்கள் பட்டினிக்கும் ஓட்டை வீட்டிற்கும் பதில் விரைவில் இருக்கின்றது. நன்றி தாயே இந்த முல்லை பெண்ணால் உங்களுக்கு செய்யக்கூடியது இதுவே.

நன்றி

முல்லை அரசி

(www.eelamalar.com)