கடற்கரும்புலிகள் லெப்.கேணல் தோழைநம்பி, மேஜர் வேங்கை உட்பட ஏனைய கடற்புலிப் போராளிகளின் 25 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்…!
விடுதலைப்புலிகளின் பலத்தை அதிகரிக்கும் நோக்கோடு 13.02.1996 அன்று முல்லைத்திவை நோக்கி வந்துகொண்டிருந்த வேளை திருகோணமலைக்கு உயர்வாக 70 கடல்மைல் தொலைவில் வைத்து இந்தியக் கடற்படையால் மறிக்கப்பட்டு சிறிலங்காக் கடற்படையிடம் கையளிக்கப்பட்டது.
கடற்புலிகளின் அணிகள் சென்று கப்பலில் இருந்த சில தளபாடங்களையும் , மாலுமிகளையும் மாற்றி எடுத்துக்கொண்டு அந்த கப்பலில் கடற்கரும்புலிகள் லெப்.கேணல் தோழைநம்பி, மேஜர் வேங்கை உட்பட கடற்புலி மேஜர் இலங்கேஸ்வரன் மூவருமாக முல்லைத்தீவு நோக்கி கப்பலை நகர்த்திக்கொண்டிருந்த தருணத்தில் ஏற்பட்ட சில மணித்தியால கடற்சமரின் பின் முல்லைத்திவிற்கு 26 கடல்மைல் தொலைவில் வைத்து சிறிலங்காப் படையினரின் விமானப் படையின் புக்காரா விமானக் குண்டுவீச்சில் வீரகாவியமான கடற்கரும்புலிகள், கப்டன் வாணன், கப்டன் அருள் உட்பட கடற்புலிப் போராளிகளின் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தாயக விடுதலை வேள்வி தனில் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கங்கள்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”