Karuna_and_Prabhakaran

கடவுளுக்கு நிகராக எண்ணியவரை அழித்துவிட்டேன்!! கவலைப்படுகிறார் கருனா!!

‘எனது தலைவரை நான் கடவுளுக்கு நிகராக எண்ணியிருந்தேன்’ ஆனால் அவருடன் இருந்தவர்கள் என் மீது கொண்ட பொறாமைகாரணமாக அவருக்கு தவறான தகவல்களைக் கூறி என்னை அவரிடம் இருந்து பிரித்துவிட்டார்கள்‘ இவ்வாறு தெரிவித்துள்ளார்

முன்னாள் விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதியும் பின்னர் புலிகளைக் காட்டிக் கொடுத்து துரோகம் செய்தவருமான கருனா. மிக நீண்ட காலமாக கருனாவின் நண்பர்களாக இருந்து கருனா புலிகளிடம் இருந்து பிரிந்த பின்னர் கருனாவின் தொடர்புகளைத் துண்டித்த சில புலம் பெயர் தமிழர்கள்  நீண்டக காலத்தின் பின்னர் கடந்த வாரம் கருனா சந்தித்த போதே இவ்வாறு கருனா தெரிவித்துள்ளாராம். கருனா மேலும் தெரிவித்த கருத்துக்கள் இதோ

‘விடுதலைப்புலிகளின் தலைவரான வே.பிரபாகரன் முஸ்லீம் மத்தியகிழக்கு நாடுகளிலும் முஸ்லீம் நாடுகளிலும் காணப்படும் தீவிரவாதிகளைப் போன்றவர். அந்த முஸ்லீம் தீவிரவாதிகள் தங்களது மதத்தின் மீது கடுமையான பற்று வைத்து பல முகம் சுழிக்க வைக்கும் செயல்களைச் செய்து வருகின்றார்கள். அதே போல்தான் பிரபாகரனும் தீவிர தமிழ்த்தேசியப் பற்று வைத்து செயற்பட்டு வந்தார்.

தமிர்களுக்கு என நாடு ஒன்றை உருவாக்கவும் கனவு கண்டு வந்தார். இருப்பினும் உலக நடப்புகளுக்கு ஏற்ப இந்தச் செயற்பாடுகள் சரி வராது என்பதை அவருக்குப் புரிய வைக்க யாரும் முயலவில்லை. அன்ரன்பாலசிங்கம் சில வேளை பிரபாகரனின் தீவிர கொள்கையை விமர்சித்து நேரடியாகவே பிரபாகரனுடன் முரண்படுவார். அவரின் மறைவுக்குப் பின்னர் யாரும் அவருடன் தர்க்கம் புரியவில்லை.

அவர் என்ன சொல்கின்றாரோ அதையே தலைமேல் வைத்து முன்னெடுத்துச் சென்றார்கள். யுத்தம் முள்ளிவாய்க்கால் வரை வந்து தமிழ்மக்களை அழித்தொழித்ததுக்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் காரணம். பிரபாகரனுக்கு சரியான பாதையை அவர்கள் காட்டத் தவறிவிட்டனர். தங்கள் சுயநல அரசியலுக்காகவும் தாம் எதிர்த்துக் கதைத்தால் தம்மை புலிகள் ஒதுக்கிவிட்டுவிடுவார்கள் என்றும் தமது உயிருக்கு உத்தரவாதம் இல்லாது விட்டுவிடும் என்ற காரணங்களுக்காக அவர்கள் பல ஆயிரம் தமிழ் மக்களைக் கொல்வதற்கு ஒத்துழைத்துள்ளார்கள.

என்னை பிரபாகரனிடம் இருந்து பிரிப்பதற்கு முக்கியமானவனாக இருந்தவன் பொட்டன். அவனது தவறான தகவல்களாலேயே பிரபாகரன் என்னை தவறாக புரிந்து கொண்டார்.  இது தொடர்பாக நான் பிரபாகரனுக்க விளக்கம் கொடுப்பதற்கு முயன்றும் பிரபாகரன் என்னுடன் தொடர்பு எடுக்கவில்லை. என்னை வன்னிக்கு அழைப்பதிலேயே குறியாக இருந்தார். வன்னிக்கு சென்றால் என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியும். எந்தவொரு தவறும் செய்யாத நான் என்னைப் பலிக்கடாவாக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. அதனாலேயே என்னை புலிகள் துரோகியாக்கி அமைப்பில் இருந்து விலக்கினார்கள். புலிகளுடன் நான் முரண்பட்ட பின்னர் வெளிநாடுகளிலிருந்தும் தமிழ்ப் பற்றாளர்களிடம் இருந்தும் ஏராளமான தொலைபேசி அழைப்புக்கள் வந்தன. சிலர் அழுதார்கள். புலித் தலைமையுடன் முரன்படாது சேரும் படி சொன்னார்கள். நான் அவர்களிடம் சொன்ன ஒரே ஒரு வார்த்தை ‘நான் தலைவரை எனது கடவுளாக மனதில் வைத்திருக்கின்றேன். ஆகவே அவரிடம் சொல்லி என்னை நேரடியாக அவருடன் கதைப்பதற்கு ஒழுங்கு செய்து தாருங்கள் என்பதே‘. ஆனால் அவர்களாலும் முடியாது போய்விட்டது. என்னுடன் இருந்த போராளிகளை வன்னிப் புலிகள் சுட்டுக் கொல்லத் தொடங்கினர். இதன் பின்னரே நான் தற்பாதுகாப்பு யுத்தத்தை தொடர்ந்தேன். பின்னர் ஏன் இந்தச் சண்டை என நினைத்து அதையும் கைவிட்டுவிட்டு நான் பின்வாங்கிவிட்டேன். இருப்பினும் புலிகள் என்னைத் தேடி அழிப்பதற்கு அலைந்தார்கள். பாம்பின் கால் பாம் அறியும் என்பது போல் நானும் தப்பியபடியே இருந்தேன்.

2006ம் ஆண்டு புலிகளுக்கு எதிரான யுத்தம் ஆரம்பிக்கும் போதே எனக்கு விளங்கிவிட்டது புலிகள் தோற்பது நிச்சயம் என்று. ஏனெனில் புலிகளை ஒழிப்பதற்கு தனியே இலங்கை இராணுவம் மட்டும் முயற்சிக்கவில்லை. உலகத்தின் முக்கிய வல்லரசுகள் எல்லாம் சேர்ந்து நவீன தொழில்நுட்பத்துடன் சண்டையில் ஈடுபட்டார்கள். வன்னியில் இருந்து இயக்கும் ஒரு தொலைத்தொடர்புக் கருவியின் செயற்பாடும் துல்லியமாக அறியக்கூடியவகையிலும் ஆடு, மாடு சென்றால் கூட அறியும் வகையிலும் வன்னிப் போரில் அனைத்து தொழில்நுட்பங்களும் உலக வல்லரசுகளால் பயன்படுத்தப்பட்டதை புலிகள் அறிந்திருப்பார்களோ தெரியாது.

இறுதி யுத்தத்தில் இந்திய இராணுவம் முழு அளவில் புலிகளுடன் போரிட்டது உண்மை. ஒரு கட்டத்தில் புலிகளின் யுத்த வியுகங்களை முறியடிக்க முடியாது திண்டாடிக் கொண்டிருந்த போது என்னிடம் ஆலோசனை கேட்டார்கள். அதற்கு முதலில் நான் தயங்கினேன். ஆனால் அவர்கள் செய்த அட்டூழியங்களை மனதில்  வைத்து சில ஆலோசனைகளை கூறினேன்.  அதன்படி நடந்து அவர்களும் வெற்றி கொண்டார்கள்.  புலிகளிடம் இருக்கும் ஒரே ஒரு பலவீனம் அவர்களது ஆட் பற்றாக்குறையே ஆகும். படையினரும் அதை வைத்தே புலிகளை வென்றார்கள்.

ஆனால் பிரபாகரன் வன்னியில் தொடர்ந்து தங்கியிருப்பார் என்பதை நான் நம்பவில்லை. ஆனால் துர்அதிஸ்டவசமாக பிரபாகரன் இறுதி யுத்தம்வரை வன்னியில் தங்கியிருந்துள்ளார். யுத்தத்தில் படையினர் அனைத்து இடங்களையும் கைப்பற்றி புலிகளையும் பிரபாகரனையும் காட்டுக்குள் ஓட வைக்கவே நான் நினைத்தேன். ஆனால் பிரபாகரனை அழிப்பதற்கு நான் காரணமாகிவிட்டேன் என்பது எனக்கு சிறிது சங்கடமாக உள்ளது.

ஆனால் புலிகளுக்கே இந்த யுத்தத்தில் தாம் தோல்வியடைவோம் என்பது விளங்கியிருக்கும். ஆனால் அவர்கள் எதற்காக தொடர்ந்து மரபு வழிப் போரில் ஈடுபட்டு பெருமளவு மக்களைக் கொலை செய்ய வைத்தார்கள் என்பது புரியவில்லை.‘ இவ்வாறு கருனா தெரிவித்ததாக கருனாவின் நண்பனான ஒருவர் தனது முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.