Fotor1223225550

தான் யோகா பயிற்சியில் ஈடுபடும் படத்தை தனது அனுமதியின்றி நாமல் வெளியிட்டுள்ளாா் – மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் யோகா பயிற்சியில் ஈடுபடும் படத்தை தனது மகன் நாமல் ராஜபக்ச அனுமதியின்றி வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பிரகீத் காணமற்போன விவகாரத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள புலானய்வாளர்களை சந்திப்பதற்காக வெலிக்கடை மருத்துவமனைக்கு சென்ற வேளையே  அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Fotor122322579

நான் யோகபயிற்சில் கடந்த சில வருடங்களாக ஈடுபட்டு வருகிறேன், எனினும் இந்த விடயம் ஊடகங்களிற்கு தெரியாது, கடந்தவாரம் நான் எனது மகனுடன் யோகா பயிற்சிநிலையத்திற்கு சென்றதை தொடர்ந்தே  வெளியுலகிற்கு இந்த விடயம் தெரியவந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய யோகா பயிற்சியே எனது உடல்நிலை இந்தநிலையில் இருப்பதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

(www.eelamalar.com)