கண்ணை மூடி கடவுள்
சிரித்தான்
உலகம் கூடி எம்மை அழித்தான்
மடிந்த எம்மினந்தான்….

கண்ணுக்கு முன்னே
தெரிகிறதே
போர் தந்த அவலம்
தமிழன் பிறந்த மறைந்து
போன வருடம் எத்தனை
தெரியுமா

ஈழத்தமிழன் அழிந்த போன
அவலம் கண்ணுக்கு முன்னே
தெரிகிறது
வருடங்கள் கடந்து போன
பின்னும் சோகம் இன்னும்
மறையலையே

எழுந்தது இனவெறித்தான்
அழிந்தது எம்மினம்தான்
விதியும் மதியும் உலகின்
சதியில் சாய்ந்ததே

அண்டமெங்கும் நடு நடுங்கள்
உலகமெங்கும் கண் கலங்க
கடலோரம் எங்கும்
பிணங்கள் கிடந்ததே

கண்ணுக்குள்ளும் அடங்காம
எண்ணுக்குள்ளும் அடங்காம
மண்ணுக்குள் அடங்கி
போனோமே

கண்ணை மூடி கடவுள்
சிரித்தான்
உலகம் கூடி எம்மை அழித்தான்
மடிந்த எம்மினந்தான்….

=சிவா தமிழீழம்=