முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி திடிர் மரணம் சோகத்தில் தமிழகம்…

மரணத்தின் விளிம்பில் இருக்கும் எதிரியையும் மன்னித்து வாழ்த்தும் பண்பினன் தமிழன்….!

அதனாலோ என்னவோ எம் இனத்தை அழித்தவர்களுக்கும் வலியில் துடிக்கையில் அறம் பாட முடியவில்லை.

இன்று 94 வது அகவையில் சிறுநீர் வழி தொற்று நோயால் அவதிப்படுகின்ற கலைஞர் பாவம் குணமாகட்டும் என்றே மனம் நினைக்கின்றது.

ஏனெனில் அன்று எங்கள் தலைவனின் தாய் என்றில்லாவிட்டாலும் ஒரு 65 அகவை கொண்ட எதுவுமே அறியாத அப்பாவி மூதாட்டி அன்னை பார்வதி அம்மாவுக்கு இதே சிறுநீர் வழி தொற்று சிக்கல் வந்த பொழுது அவருக்கு சிகிச்சை கொடுக்க மறுத்த கொடுமையை கலைஞர் நெஞ்சு உருகி குற்றஉணர்வில் உணரவேனும் அவர் குணமாகட்டும்.!!

அன்று எங்கள் தமிழ் தலைவனை ஈன்றெடுத்த தாய் பார்வதி அம்மா சிங்கப்பூரில் சிகிச்சை பெற முடியாது என்ற நிலையில் அன்னை தமிழகத்தை நாடி வந்த பொழுது .சென்னையில் சிகிச்சை வழங்க மறுத்த இரக்கமற்ற கொடுமையை கலைஞர் இன்று சிந்திப்பாரா?

என்ன பாவம் செய்தார் என்று அன்று அவருக்கு அந்த தண்டனையை அவர் வழங்கினார்?

வந்தேறு குடியை எல்லாம் வாழ வைத்தும் ஆள வைத்தும் பார்க்கும் அன்னை தமிழக மண்ணில் எங்கள் தமிழன்னை விமானத்தால் வந்திறங்க கூட விடவில்லையே? அடக்கி வைத்த சிறுநீரை கூட கழிக்க விடாமல் திருப்பி அனுப்பினார் கலைஞர்.

“சங்க இலக்கியங்களில் ஒரு தெருவில் சாவு ஓசை கேட்டால் இன்னொரு தெருவில் மங்கள ஓசை கேட்டிருக்கிறது!” – முள்ளிவாய்க்கால் பற்றி கலைஞர்

ஆனாலும் கலைஞரே நாங்கள் உங்களை போல் திராவிடர் அல்லர். தமிழர்கள்!

அதனால் எம்மால் உங்களுக்கு உயிர் பிரியும் வலியில் நீங்கள் துடிக்கையில் அறம் பாட முடியவில்லை!

நீங்கள் குணமாகி நலம் பெற்று வீடு திரும்பி சிந்திக்கும் திறன் கொண்டு வாழ வேண்டும்!

ஏனெனில் மரணத்தின் முன்பு ஒரு பொழுதேனும் நீங்கள் ஈழ தமிழினத்திற்கு செய்த கொடும் பாவங்களை எண்ணி விழி சிந்த வேண்டும்!….


•எது விதைக்கப்படுகிறதோ
அதையே அறுவடை செய்ய முடியும்!

கலைஞர் கருணாநிதி தன் வாழ்நாளில் எதை விதைத்தாரோ அதையே இப்போது அறுவடை செய்கிறார்.

முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டது பற்றி கேட்டபோது சங்க இலக்கியங்களில் ஒரு தெருவில் சாவு ஓசை கேட்டால் இன்னொரு தெருவில் மங்கள ஓசை கேட்டிருக்கிறது என்றார்.

ஆயிரக் கணக்கில் தமிழர் செத்தபோது துக்கம் அனுட்டிக்க மறுத்தவர் ஆந்திர முதல்வாரன ஒரு தெலுங்கர் இறந்தபோது தமிழகத்தில் விடுமுறை விட்டு துக்கம் அனுட்டித்தார்.

எனது இனம் அழிந்தபோது அனுதாபம் கொள்ளாதவர், அவர் இறக்கும்போது எம்மால் அனுதாபம் கொள்ள முடியாது.

எம்மால் அவரை மறக்கவும் முடியாது. மன்னிக்கவும் முடியாது.

ஏனெனில் நாம் தமிழர்!