கார்த்திகை 27

சந்தனப் பேழையில் செல்பவரே
நீழ்துயில் ஏனோ கொள்ளுகிறீர்
நித்தம் விழித் எங்கள்
தேசத்தை காத்தவர் நீங்கள்
நிசப்தமாகவா தூங்குகிறீர்
காலை விடிந்ததும்

கார்த்திகை மேகங்கள் சூழும்
இங்கே கார்த்திகை பூக்களும் பூக்கும்
மாலையில் மணியோசை கேட்க்கும்
கல்லறை எங்கும் தென்றல் வீசும்
துயிலெழும் வீரர்கள் கண்ணெதிரே தோன்றும்
நெஞ்சம் நெகிழ்ந்து

கண்கள் பனிக்கும் கடலாகும் கண்ணீரில்
கார்த்திகை மழை வெள்ளம் தோற்கும்
அழுகுரல்கள் வரம்பு மீறும்
உங்கள் நினைவதை தாண்டியே பாயும்
காட்சிகள் ஆயிரம் நிகழும்
இது .. குருதி உறையும் கணபொழுதின்

உலக அதிசயம் இதை
உணர எமக்கு உரிமைப் போரின்
வகிப்பு அவசியம்
உங்கள் மூச்சை சுமக்கும்
காற்று வந்து வீசும்
தேசமெங்கும் உங்கள் பெயர் பேசும்
கல்லறையின் கதைகள் பல சொல்லும்
காதலுடன் கண்ணீரையும் சிந்தும்
எங்கள் தேசியக் கொடியின் வீச்சு
மாவீரரே உங்களின் உயிர் மூச்சு

தாயகக்கனவுடன் காற்றெனக் கலந்தீர்
தமிழ் தாயகம் சேர்த்திட
தரணியில் பிறந்தீர்
வேருடன் விழுதுகள் எழும்
வீரனே உன் வீரம் கதை பேசும்
நேற்றைய நாளிகை நினைவினில்
நீ சுமந்த கனவுகள் மனதினில்
தோற்றது இல்லை தமிழ் மறவரினம்
ஏற்றுவோம் கொடியை தினம் .

” சி . வடிவேற்கரசன் “
‘தமிழீழம்’

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”