காவல் தெய்வங்கள்…

மற்றவர் வாழ்விற்காக
மண்ணிலே புதைந்த
வீரமறவர்கள்
நாங்கள் வாழ
உருகி ஒளிர்ந்த மெழுகுகள் .
இரவில் விழியுறங்காது
கால் கடுக்கவிருந்து
இருளை விரட்டி
விடியலை விடுவித்தவர்கள்.
அகதியாய் அலையாமல்
தமிழனின் புதிய வரலாற்றை எழுதிய
காவிய நாயகர்கள்.
முகம் தெரியாத
இருட்டு வாழ்க்கைக்கு
இடமளிக்காமல்
போருக்கு புறப்பட்ட
புரட்சிப் பூக்கள்.
தமிழீழ எல்லைக்கே
வேலியாய் நிரைத்த
எல்லையோரக் காவலர்கள்.
தாயவள் விலங்குடைக்க
தன்னுயிர் ஈய்ந்திட்ட
தற்கொடையாளர் நீங்களன்றோ
தமிழீழ காவல் தெய்வம்.

தி.இளவரசன்
(1995ம் ஆண்டு வரையப்பட்ட கவிதை)

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”