கிளிநொச்சியில் தமிழ் இராணுவத்தினர் மீது வாள்வெட்டு
கிளிநொச்சி – ஊற்றுப்புலம் பகுதியைச் சேர்ந்த இரண்டு தமிழ் இராணுவத்தினர் மீது அடையாளம் தெரியாத சிலர் வாள்வீச்சை மேற்கொண்டுள்ளனர்.
24.08.17 இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இருவரும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒருவரின் வலது கை முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபடும் குழு ஒன்று இந்த வாள்வெட்டை மேற்கொண்டிருக்கலாம் என காவற்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.