அந்த ஒற்றை வார்த்தையில்தான் தனித் தமிழீழ கோரிக்கையின் ஆன்மா இன்னும் உயிர்வாழுகின்றது

குருதியாற்றின் நடுவே இறுதி கணங்கள்….

ஒரு போராளியின் நினைவிலிருந்து…

நச்சுக் குண்டுகள்,விமான குண்டுவீச்சு,கொத்து குண்டுகள்,பாஸ்பரஸ் குண்டுகள்,பல்குழல் எறிகணை வீச்சு,டாங்குகளின் ராட்சத குண்டுவீச்சுகளை எதிர்கொண்டபடி சூசை அண்ணையோடு பானு,விடுதலை,புலவர்,சீறிராம் அணிகளை இறுதிவரை போராடி மடியும் திட சங்கற்பம் பூண்டவர்களாய் அணிகளை வழிநடத்தினர்.தேசிய தலைவருடன் பொட்டம்மான் ஜெயம்,குமரன் மற்றும் ரட்ணம் மாஸ்டரின் கரும்புலி அணிகள் ஆவேசம் எடுத்து ஆடின.மே 15 அன்று ஊடறுப்பு தாக்குதல் நடத்தி காயமுற்றிருந்த சொர்ணம் அண்ணை தனது உடலை வெடிவைத்து தகர்க்கும்படி எமக்கு கட்டளையிட்டு எம் கண் முன்னாலேயே கடைசிவரை போராடுங்கோ புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்று கூறியபடி தன் கழுத்தில் கிடந்த இரு குப்பிகளையும் கடித்து கண்கள் சொருக வீரமரணத்தை தழுவினார்.சொர்ணம் அண்ணை கேட்டுகொண்டதன்படி அவரது உடல் எதிரிகள் கையில் சிக்கிவிடாதபடி வெடிவைத்து தகர்த்துவிட்டு சூசை அண்ணையிடம் தொடர்பு கொண்டோம்.

ஐ.நா பொதுச் செயலரின் தனிச் செயலர் நம்பியார் பேச்சுவார்த்தை நடத்த வரும்படி கேட்டுகொண்டதற்கிணங்க அரசியல்பிரிவு பொறுப்பாளர் நடேசனையும் பூலித்தேவனையும்
வட்டுவாகலுக்கு அனுப்பிவைப்பதாக கூறினார்.அவர்கள் வட்டுவாகல் சென்றபின் அவர்கள் தொடர்பு முற்றாக அறுந்தது.நடேசன் பூலித்தேவன் அண்ணையாட்களுக்கு கிடைத்த துரோக மரணம் சர்வதேசம் எங்களை காக்க வராது என்பதை தெளிவாக உறுதிபடுத்தியது.இந்த நிலையில் களமுனையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு எஞ்சிய அனைவரையும் ஒன்றினைத்து தலைவரை பாதுகாப்பாக வெறியேற்றுவதே எங்களுக்கு மிக முக்கிய பணியாக இருந்தது.நாங்கள் நிண்ட இடத்திலிருந்து சூசையண்ணை நிண்ட தூரம் 400மீட்டர் போலதான் இருக்கும்.சூசையண்ணையிடம் தொடர்பெடுத்து தலைவரின் நிலைப் பற்றி கேட்டபோது அதைப் பற்றி கவலைபட வேண்டாம் அண்ணண் பத்திரம் நீங்கள் கடைசிவரை போராடுங்கள் என்று கூறியதோடு சூசையண்ணையின் தொடர்பும் முற்றாக அறுந்தது. தலைவரைப் பற்றி கவலைபட வேண்டாம் என்று கடைசியாக அவர் சொன்ன அந்த வார்த்தைகளில்தான்

தமிழீழ நிலபரப்பை இழந்தும்,இத்தனையாயிரம் போராளிகளை இழந்தும்,தம்பி காப்பாற்றுவார் என்று தலைவரை தம்பி வந்த இத்தனையாயிரம் பொதுமக்களை இழந்தும்,எத்தனையோ பால்மணம் மாறாத பிஞ்சுகளை இழந்தும்,தலைவர் பார்த்து பார்த்து வளர்தெடுத்த இத்தனை தளபதிமார்களை இழந்தும்,இத்தனை ஆயுத வளங்களை இழந்தும், தலைவர் பார்த்து பார்த்து கட்டமைத்த இத்தனை கட்டமைப்புகளை இழந்தும்,இத்தனை ஆண்டுகாலம் அரும்பாடுபட்டு போராளிகளின் தியாகத்தால் தலைவர் உருவாக்கின தமிழீழ சாம்ராஜ்ஜியத்தை இழந்தும்,அனைத்தையும் இழந்து சூனிய வெளியில் நிர்கதியாய் நிற்கின்றபோதும் எங்கள் மனோதிடத்தையும் தலைவன் கொடுத்த உறுதியையும் இன்னும் இழக்காமல் இருப்பதற்கு காரணம் தலைவரை பற்றி கவலைபட வேண்டாம் என்ற அந்த ஒற்றை வார்த்தைதான்.

ஆனாலும் மனது இரும்பாய் கணக்கின்றது இத்தனை ஆண்டுகாலம் எங்களை தலை நிமிர்ந்து வாழவைக்க தன்னலம் கருதாதது அயராது அரும்பாடுபட்டு உழைத்த அந்த மாமனிதனின் தலையில் இன்னும் எத்தனை காலத்திற்கு எங்கள் பாரசிலுவையை சுமக்கவைக்க போகின்றோம்,இன்னும் எத்தனை காலத்துக்குதான் அவர் இனத்துக்காக இரவு பகல் பாராது உழைக்க வேண்டும் என்ற வேதனையும் வாட்டுகின்றது.என்ன செய்வது மானமுள்ள தமிழினம் உலகெல்லாம் பரவி பறந்து விரிந்து வாழ்ந்தாலும் தமக்குள் கருத்து முரண்பாடு கொண்டிருந்தாலும் உலக தமிழினம் பிரபாகரன் என்ற ஒற்றை புள்ளியின் கீழ்தான் ஒன்றுபட்டு நிற்கின்றது.அந்த பெயருக்குரிய வல்லமை,வலிமை,ஆற்றல் அப்படிபட்டது.அந்த இடத்திற்கு வேறு ஒரு பெயர் இதுவரை இனங்கானபடவில்லை,அது இந்த ஜென்மத்தில் நடக்கபோவதுமில்லை,நடப்பதற்கான சாத்தியகூறுகள் துளியளவும்மில்லை.தமிழ் மக்கள் மனங்களில் அண்ணை பிரபாகரன் எட்டியிருக்கும் உச்சத்தை இனி வேறு எவனாலும் எட்டவே ஏலாது இது சத்தியம்.எனவே உலக தமிழர்கள் ஒன்றுபட்டு தனிஈழ கோரிக்கையை முன்வைத்து ஒற்றை தலைமையின்கீழ் ஒன்றுபடுவோம். தலைவரின் கரத்தை பலபடுத்துவோம்.காலம் எமக்களித்திருக்கும் வரலாற்று கடமையாற்றுவோம். தலைவன் காலம் நம்காலம் அதுதவறினால் இல்லை தமிழீழம்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
பிரபாசெழியன்.