Fotor031210048-1

குருவி என இரகசிய பெயர் கொண்ட பொட்டு அம்மான் உயிருடன்?

விடுதலை புலிகளின் முக்கியஸ்தர்களில் மிகவும் முக்கியமானவராக இன்று வரை கண்காணிக்கப்படும் பொட்டு அம்மான் என்று விடுதலை புலிகளின் தளபதியின் உண்மையான பெயர் சண்முகலிங்கம் சிவசங்கர் என்பதாகும். அவரின் பேச்சுத்திறமைகளை நாள் முழுவதும் கேட்டுக்கொண்டிருக்கலாம். இவர் தேசிய தலைவரின் பாதுகாப்பிற்கு முழுப்பொறுப்பாக இருந்தவர்.  தலைவரின் பொறியல் சிந்தனைகளுக்கு வடிவம் கொடுத்த ஓர் உத்தம தளபதியாகும்.

இவர் இறுதி யுத்தத்தில் இலங்கை அரசப்படை அழித்துவிட்டதாக பிரச்சாரங்களை மேற்க்கொண்ட போதும், அவரின் இறந்ததாக கூறப்பட்ட வீர உடலை காட்டவில்லை என்பது முக்கியமானதாகும். தேசிய தலைவன் பிரபாகரனைப் போன்ற உடலை காட்டிய அரசு,  இப்பொழுது அவர் இறந்துவிட்டதற்கான உத்தியோகபூர்வ இறப்பு சான்றிதழை இன்று  வரை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இன்று பிரபாகரனைப்  பற்றிய செய்திகள் நாளாந்தம் அரச முக்கியஸ்தர்களின் வாய் முணுமுணுத்துக்கொண்டே இருப்பது தமிழ் மக்களை பொருத்தவரை பிரபாகரன் இறக்கவில்லை. அவர் எல்லோரின் இதயத்திலும் இருப்பதனை போல்,  வீர கட்டளை தளபதி பொட்டு அம்மானும் உயிருடனே இருக்க வேண்டும். ஏன் என்றால் அவர் தமிழ் இனத்தின் விடுதலைக்கான இளஞர் சமுதாயத்தை விதைக்க, பன்படுத்திய வீரத்தை ஊட்டி போராடிய  தளபதியாக செயல்பட்டவர். ஆகவே பொட்டு அம்மானையும் தேடும் நிலை நல்லாட்சி அரசுக்கு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 2010 காலப்பகுதியில்  தமிழக கியூ பிராஞ்ச் போலீஸாரால் கைது செய்யப்பட்டு ,  பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த தமிழீழ உளவுப் பிரிவின் பொறுப்பாளரான சிரஞ்சீவி மாஸ்டர் ஜூனியர் விகடன் பத்திரிகைக்கு அளித்திருக்கும் பேட்டியில்

கேள்வி : உங்களின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானின் நிலை குறித்தாவது சொல்லுங்களேன்..?

பதில் : (பலமாகச் சிரிக்கிறார்) மிகப் பத்திரமாக இருக்கிறார். அவருக்கு எந்தப் பாதிப்புமில்லை..

என தெரிவித்திருந்தமையும் பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதற்கான ஆதாரமாகவே சொல்லப்படுகின்றது. மேலும்,  இந்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் எதுவும் இலங்கையின் வார்த்தையை நம்பவில்லை. பிரபாகரன்- பொட்டு அம்மான் இருவருமே தலைமறைவானோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இவர்களின் மரணச் சான்றுக்கான கடிதத்தை, அன்று  இலங்கை தலைமை நீதிபதி அளித்த ஒப்புதல் என அனைத்தையும் நிராகரித்துள்ளது சிபிஐ.

download (84)

விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்லி, நந்திக்கடலில் பிரேதத்தைக் காட்டிய இலங்கை அரசு, பொட்டு அம்மான் குறித்த எந்தத் தகவலையும் உறுதிப்படுத்தவில்லை. அதனால், பிரபாகரன் விஷயத்தில் சந்தேகப்பட்ட ஈழ ஆதரவாளர்கள்கூட பொட்டு அம்மான் உயிரோடு இருப்பதாக உறுதியாக நம்புகின்றார்கள்.

”ஈழப்போர் நடந்த காலம் தொட்டு இன்றுவரை இலங்கையின் புலனாய்வுப் பிரிவுக்குப் பெரிய தலைவலியாக இருப்பது பொட்டு அம்மான்தான். கடைசிக்கட்டப் போரின் போது அவருக்கு ‘குருவி’ என ரகசியப் பெயர் சூட்டப்பட்டது. இப்போதும்கூட, ரகசிய முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் புலிகளிடம் சிங்கள ராணுவமும் புலனாய்வுத் துறையும் அவரைப்பற்றி தொடர்ந்து விசாரித்து வருகின்றன. சில நாட்களுக்கு முன் ராணுவத்திடம் பிரபா என்ற போராளி சிக்கினார்.

அவரைத் விசாரித்தப்போது  பொட்டு அம்மான் வெளிநாட்டுக்கு தப்ப முயன்று கொண்டிருப்பதாகத் தெரிய வந்தது. அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், கொழும்பில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வெள்ளவத்தை பகுதிக்குச் சென்று அங்கு இருந்த ஆறு மாடிக் கட்டிடம் ஒன்றை ராணுவத் தரப்பு சல்லடையாகத் துழாவியது. அதிகாரிகள் அந்த இடத்துக்கு செல்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, சந்தேகத்துக்கிடமான சிலர் அங்கிருந்து தப்பிச் சென்று இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரது பெயர் ‘குருவி’! இந்த விஷயத்தை மீடியாக்களுக்குத் தெரியாமல் இலங்கையின் உளவுப் பிரிவு மறைத்தாலும், சர்வதேச உளவு அமைப்புகளுக்கு ‘குருவி’ என்ற பெயரில் தப்பியது பொட்டு அம்மான் என்பது புரிந்துவிட்டது.

பிரபாகரன், பொட்டு அம்மான் இறந்து விட்டதாக இலங்கை அரசு இந்தியாவுக்கு கொடுத்த ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என்பதை இண்டர்போல் பொலிஸ் ஏற்கெனவே புரிந்துகொண்டு விட்டது. இதனால்தான், ராஜீவ் கொலை வழக்கை முடிக்க முடியாமல் சி.பி.ஐ. திணறி வருகிறது. இதற்கிடையில், பொட்டு அம்மானின் சர்வதேச தொடர்புகளை யூகித்த இண்டர்போல், அவரை மீண்டும் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருக்கிறது!”

இந்நிலையில் இவையனைத்துக்குமான விடை விரைவில் வெளியாகும் என்பது உண்மையாகும்.  இந்நிலையில் இறுதி யுத்தக்காலப்பகுதில் தமிழ் சமூகத்திற்கு வேதனையும்  சோதனையும் நிறைந்த இருண்ட மர்மம் நிறைந்த காலப்பகுதியாகும் என்பதே யதார்த்தமாகும். பிரபாகரன் உயிருடன் என்றாலோ, அல்லது மகிந்த அரசு யுத்த வெற்றியை அறிவித்த நாளில் அவர் இறக்கவில்லையென்றாலோ, பிரபாகரனும், பொட்டு அம்மானும் உயிருடன் வாழ்க்கின்றார்கள் என்பதே இந்திய புலனாய்வுத்துறை மற்றும் ஈழமக்களின் கண்ணீர் நிறைந்த ஆய்வுகள் எமக்கும் சொல்லும் ஆதாரங்களாகும்……..

Fotor0301132149

(www.eelamalar.com)