கெஞ்சமாட்டோம் என சூளுரைத்தாய் “லெப். கேணல் பொன்னம்மான்”

யாகப் பயணத்தை
தொடங்கினாய்
கெஞ்சமாட்டோம் என
சூளுரைத்தாய்
நீதான்..
புதிய உலகுக்காய்
புறப்பாடு செய்து
புரட்சி மறவர்களுக்கு
பயிற்சிப் பாசறைகள்
நிர்மாணித்தாய்
நெருப்புப் பூக்களுக்கு
விதை போட்டவனே!
எங்கள் இரத்தத்தால்
உன் பயிரை
வளர்க்கிறோம்.
பாலைவனப்
படுக்கைகளிலே
நீ எதிர்பார்த்த
அக்கினிப் புஷ்பங்கள்
நாளை மலரும்.
வெளியீடு :எரிமலை இதழ்