கைகள் இரண்டையும் இழந்தும் நம்பிக்கையை இழந்துவிடாத முன்னாள் பெண்போராளி
கைகள் இரண்டையும் இழந்து நம்பிக்கை இழந்துவிடாத அந்த முன்னாள் பெண்போராளியை கைதூக்கிவிடுவது காலத்தின் தேவை .
அவ்வகையினில் புலம்பெயர் உறவுகள் தங்கள் கைகளினை எப்போதுமே தாயக உறவுகளிற்காக நீட்டியவண்ணமேயிருக்கின்றன.
வடமராட்சி கிழக்கினில் வசிக்கும் அந்த முன்னாள் போராளி கணனி கற்பித்தலை தாயகத்து சிறார்களிற்கு வழங்க ஆர்வம் கொண்டுள்ளார்.
அதற்கான ஒரு சிறு கற்றல் மண்டபத்தை அமைத்து வழங்க ஜெர்மனின் உதவும் இதயங்கள் அமைப்பு முன்வந்திருந்தது.
ஜேர்மனின் கயல்பிரோன்,பாட்பிறிக்சால் லு.இந்திரகுமார் கடந்த 10 வருடங்களிற்கு மேலாக சமய சடங்குகளிற்கு பொருட்களை வாடகைக்கு விடுத்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயினை தாயக மக்களிற்கு வழங்கிவருகின்றார்கள்.
அவர்களே தமது உதவியனை இப்போது கணணி கற்றல் அறை அமைப்பதற்கு இரண்டாம் கட்ட உதவியாக ஜம்பதினாயிரத்தை வழங்கி அந்த முன்னாள் போராளியின் வாழ்வினில் விளக்கேற்றி வைத்துள்ளனர்.
ஊதவியினை அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர் ச.சஜீவன் பெற்று வழங்கியிருந்தார்.