“சண்டை எண்டால் இதுதாண்டா சண்டை.சண்டை பிடித்தால் இப்படி பிடிக்கவேணும்”
–பிரிகேடியர் பால்ராஜ்
சிறீலங்கா,இந்தியா மட்டும் அல்லாது உலக இராணுவ வல்லுநர்களாலும் புலிகளால் ஒருகாலமும் கைப்பற்ற முடியாது என்று கணிக்கப்பட்ட “ஆணையிறவு” படைத்தளத்தை கைப்பற்ற தாக்குதல் திட்டம் தலைவரால் வகுக்கப்பட்டு திட்டத்தை செயல்படுத்தி படையணிக்கு தலைமையேற்று வழி நாடத்த தலைவர் அவர்களால் லீமா அண்ணை நியமிக்கப்படுகிறார்……
சண்டை தொடங்கி இருபுறமும் தாக்குதல் மிக உக்கிரமாக நடந்துகொண்டு இருக்கின்றது,கொழும்பில் சிங்கள இராணுவ உயர்மட்டத்திலிருந்து ஆணையிறவு சண்டையை வழி நடாத்தும் சிங்க இராணுவ மேஜருக்கு தொலைபேசி அலைப்பொன்று வருகின்றது அந்த உரையாடல் இவ்வாறாக நடக்கின்றது
“20,000 படைகளையும் நவீன ஆயுதங்களையும் வைத்துக்கொண்டு வெறும் 2,000க்கு குறைவான புலிகளை உன்னால் வெற்றி கொள்ள முடியவில்லையா நீயெல்லாம் என்ன ——-ராணுவத்துக்கு வந்தே
அதற்க்கு அந்த காளமுனை மேஜர்
சண்டை களத்தில் புலிகளின் தாக்குதலை முன்னின்று வழிநடத்துவது “பிரபாகரன்”என்றால் கூட நாம் பிழைத்து கொள்ள சிறு துளியேனும் வாய்பிருக்கின்றது ஆனால் சண்டை களத்தில் நிற்பது”பால்ராஜ்”அவன் வந்து உட்காந்தான் எண்டால்அடிச்சு எடுக்காமல் அந்த இடத்தை விட்டு நகரமாட்டான் என்று பதிலளிக்கின்றார்.
ஆணையிறவு படைத்தளம் புலிகளால் முற்று முழுதாக கைப்பற்றபட்ட பின்பு அண்ணையும் பால்ராஜ் அண்ணணும் சந்திக்கின்றனர்
“என்ன பால்ராஜ் சின்ன சின்ன சண்டைகளில் நீ பெற்று தந்த வெற்றிக்கு பாராட்டிய நான் இப்போது ஒன்றும் சொல்வில்லை என்று பார்க்கிறாயா..
உன்னைப்பற்றி நான் என்ன சொல்வது உன் எதிரியே உன்னைப்பற்றி சொல்கின்றான் கேள் என்று இந்த ஒலிப்பதிவை பால்ராஜ் அண்ணைக்கு போட்டு காட்டினார்….
வத்திராயன் பெட்டி சண்டை என்பது தமிழ்மக்களின் வீரத்தின் வெளிப்பாடு,வரலாற்றில் முதன்மை தரையிறக்க சமராக பதிவு செய்யுமளவிற்க்கு உலக இராணுவ வல்லுனர்களையே வியக்க வைத்தது குடாரப்பு தரையிறக்க தாக்குதல் நடவடிக்கை ஆகும்.
இலங்கை இராணுவத்தின் ஆகாய விமானங்கள்,நவீன கடற்படை,டாங்கிகள்,கனரக ஆயுதங்கள் போன்றவற்றை கொண்ட பலம் வாய்ந்த 20,000 மேற்ப்பட்ட சிங்கள படைகளின் நடுவே வெறும் 1,500 போராளிகளுடன் “34” நாட்கள் எதிரியை ஊடறுத்து நின்று துவம்சம் செய்தனர்.
சிங்களத்தின் முக்கிய இராணுவ தளபதிகளையும் அவர்களின் தந்திரோபாயங்களையும் வெறும் இலகு,கனரக ஆயுதங்கள்,மற்றும் ஆட்லறி பிரங்கிகளின் ஆதரவு சூட்டுடன் மட்டும் எதிர்கொண்டு வெற்றி பெற்று தமிழ் மக்களின் போரிடும் ஆற்றல்,துணிச்சல்,வீரத்தை,சர்வதேசம் வியக்கும் வகையில் வெளிப்படுத்தினார் இது தமிழ் மக்களின் வீரத்திற்க்கும் போர்குணத்திற்க்கும் கிடைத்த மகுடமாகும்..
வீரவணக்கம் வீரவணக்கம்
மானத்தமிழனுக்கு
-பிரபாசெழியன்.