download (12)

சந்திரிக்காவும் , ரணில் விக்ரமசிங்கவும் லண்டனில் சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், இடையில் லண்டனில் வைத்து சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக செய்திகள் குறிப்பிடுகின்றன. நாடாளுமன்ற அமர்வுகள் ஜனவரி 8 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது இந் நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த 22 ஆம் திகதி லண்டன் நோக்கி பயணமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும், பிரத்தியேக விஜயமாக கடந்த 18ம் திகதி லண்டன் சென்றிருந்தார். இந்நிலையில் இவ்விருவருக்கும் இடையில் லண்டனில் வைத்து முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த சந்திப்பின்போது, தேசிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள், உத்தேச அரசியல் அமைப்பு திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் குறித்த விசாரணைகளின் நிலைமை, எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ள அமைச்சரவை மாற்றங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்தும் இந்த பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

(www.eelamalar.com)