சர்வதேச மகிளிர் தினம் மார்ச் 8.

ஒரு கை போனாலும் மறு கையால் 
துப்பாக்கி ஏந்தி போராடவும் செய்தார்கள்

ஒரு கையால் குடை பிடித்துக்கொண்டு 
மறு கையால் ஒழுகும் கொட்டிலில் பரீட்சை எழுதினார்கள்

மாணவர்களை பதுங்குழியில் இருத்திவிட்டு தாய்க் கோழிபோல் காத்து நின்றார்கள்.

இவர்களால் மண் பெருமை அடைகிறதா அல்லது மண் இவர்களுக்கு பெருமை சேர்க்கிறதா என்று எனக்கு தெரியவில்லை.

ஆனால் இவர்கள் முறத்தால் புலியை விரட்டியதாக கூறும் புறநானூற்றுக் கதைகள் எல்லாம் உண்மைதானோ என்று இப்பொது நினைக்க தோன்றுகிறது.

எனது கவலை எல்லாம்,

என் இனத்து பெண்களின் இந்த அற்புதமான கதைகளை உலகிற்கு சொல்ல ஒரு சிறந்த எழுத்தாளர் இல்லையே?

இவர்களது கதையை ஒரு படமாக தர ஒரு சிறந்த இயக்குனர் இல்லையே?

இவர்களது கதையை காவியமாக பாட ஒரு நல்ல கவிஞர் இல்லையே ? என்பதுதான்.

ஆனாலும் அவர்கள் தங்கள் வரலாற்றை தாமே படைப்பார்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆதிகாலத்தில் பெண் தலைமையே இருந்ததாக சமூக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

காலப் போக்கில் பெண் எப்படி அடிமையானாள் அல்லது ஆணாதிக்கம் எப்படி ஏற்பட்டது என்பது பற்றி இங்கு நான் உரையாடப் போவதில்லை.

ஆனால் வெகுவிரைவில் அனைத்து அடிமைத்தனத்தையும் உடைத்து அவர்கள் தமது வரலாற்றை படைப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அதற்குரிய அனைத்து தகுதிகளும் எமது தமிழ் இன பெண்களுக்கு உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது.

-படித்ததில் பிடித்தது. (முரளி)