கடவுளே கனவாக்கு.!
கடவுளே!
காலம் உருண்டோடி
நாம் ஈழமும் வெல்லப் போகும்
இந்நாளில்
எதற்கையா இந்தச்சதி – எங்கள்
பால்ராஜ் அண்ண
அழைத்துக்கொள்ள இறைவா
நீபோட்ட நாடகத்தின்
பெயர் விதி
நயவஞ்சகக் கூட்டத்தையெல்லாம்
நல்லபடி வாழ வைத்துவிட்டு
தமிழரின் நலனே தனதுநலம் என
தமிழர்க்காய் வாழ்ந்தவை
தரணிவிட்டு அழைத்துக்கொண்டாய்
இதுவா உன்நீதி-இல்லை
இது எம்மினத்திற்கு இறைவா நீ
இழைத்த அநீதி.
சாவுக்கு அஞ்சாதவனை
சதிசெய்து கொன்று விட்டாய்
பகை குண்டும் அஞ்சும்- அஞ்சாநெஞ்சன்
குண்டு கொண்டு
பறிக்க முடியாத உயிரை
கோழையாய் கொடிய நோய்
கொண்டு பறித்துவிட்டாய்
இது தகுமா இறைவா இது தகுமா.
இரக்கமற்ற இறைவனே
இது கொடுமை ஈழ மக்களின் இதயம்
எங்கள் பால்ராஜ் அண்ணா -இங்கு
ஒரு இனமே கேட்கிறோம்
எங்கள் தளபதி உயிரை-இறைவா
இரக்கம் காட்டித் திருப்பிக்கொடு.
ஈழதேசமே இன்று சோகத்தில்
எல்லோர்விழிகளும் இங்கு ஈரத்தில்
இன்னுமா உடன் மதில் ஈரமில்லை
இறைவா இனியும் ஏன் தாமதம்-தமிழர்
உணர்வோடு கலந்துவிட்ட எங்கள்
உத்தமனுக்கு உயிர் கொடுத்து
உயிர்வலிக்க நாம் கேட்ட செய்தியை
கனவாக மாற்றிவிடு
எங்கள் தளபதிஉயிர் உடல்விட்டு
பிரிந்ததை கடவுளே கனவாக்கு !
ஆக்கம்:பெ. சதாசிவம்
(தமிழீழ காவல்துறை)
சமர்கள நாயகன் நூலில்லிருந்து .!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”