சாவை சரித்திரம் ஆக்கிய பெண்கள்!
சாதனை செய்த சரித்திர நாயகிகள்!
எங்களால் முடியும் என்பதை காட்டிய!
ஈழப்பெண்களின் அன்றய சரித்திரம்!
நாவால் சொன்னால் நம்பவே முடியாது!
நேரில்கண்டோம் நிமிர்ந்து போராடியதை!
தரையில் கடலில் வானிலும் எம் பெண்கள்!
படையை எதிர்த்து தடைகளை தகர்தனர்!
பல்தொழில் ஆழுமை கொண்டு விழங்கினர்!
பகட்டாய் என்றும் வாழ்ந்தது இல்லை!
பல்குழல் பீரங்கி வெடிகளுக்குள்ளும்!
முள்ளுக்கம்பி வேலிகளுக்குள்ளும்!
மூச்சுத்திணறும் நெருப்பினுக்குள்ளும்!
முப்படைகளையும் எதிர்த்து துரத்தினர்!
மூன்று சகாப்தமாய் இதனைக்கண்டோம்!
முடியும் என்ற வார்த்தைகள் கொண்டு!
வெடியும் குண்டுமாய் விரைந்த வீராங்கணை!விடுதலைப்போர்செய்த எங்களின் உறவுகள்!
சதிவலையாலே சாய்க்கப்பட்டனர்!
சர்வதேசத்தால் வீழ்த்தப்பட்டனர்!
சாவை சரித்திரம் ஆக்கிய பெண்கள்!
சாதனை செய்த சரித்திர நாயகிகள்!
சோதனை வந்து தோல்விதான் நேர்ந்தாலும்!
வேதனை கண்டு விம்மி அழுதாலும்!
வீரத்தைப்பெண்ணுக்கு காட்டிய பெருமை!
எங்களின் சகோதரிகள் மட்டுமே உண்டு!
பெண்களின் விடுதலை பேப்பரில் கவிதையாய்!
ஊடகம் விளம்பரம் தலைப்பு செய்தியாய்!
ஊர்வலம் ஆர்ப்பாட்டம் பெண்உரிமையாய்!
கண்ணால் பார்த்தோம் ஆயிரம் தடவைகள்!
ஆனால் எங்களின் பெண்போராளிகள்!
உண்மையாய் உறுதியாய் செயலிலே!
உணர்வுடன் உழைத்த விடுதலைப் பெண்கள்!
ஈழத்து தமிழ் பெண்களைமட்டுமே சாரும்!
அனைத்துலக பெண்கள் தினமதில்!
அனைவரும் இதனை புரிந்து கொள்ளுவோம்..
(விடுதலை புரட்சி)