859

ஜெயவர்த்தனா பௌத்தனாக இருந்தால் நான் ஆயுதம் தூக்கியிருக்கமாட்டேன்

ஒரு சொல் தோற்கும். ஒரு செயல் வெல்லும். சிங்களக் கட்சித் தலைவர்களிடத்தில் நேர்வழியும். நேர் மையும். மனமாற்றமும் உண்மையான தேசியத்தின் நேசிப்பாக முதலில் மானிடத்தின் மனித நேயமாக மாறவேண்டும். மனமாற்றம் தேசிய மக்களிடம் தோன்ற வேண்டும் அதற்கான வாய்ப்புகள் வரமுடியாது. உண்மையான மக்கள் நேசிப்பு கூடிவந்தாலும் சிங்கள இனவெறியர்கள் ஒத்துவரமாட்டார்கள். சிங்கள மக்கள் நெருங்கி வந்தாலும் சிங்களத் தலைவர்கள் முட்டுக்கட்டை போட்டு முரண்பாடு களை மூட்டி நொறுக்கி விடுவார்கள்.

எப்படியும் நிண்டு தமிழினப் படுகொலைக் குற்றத்தை திரும்பத் திரும்ப நிகழ்த்தாமல் விடப்போவதில்லை! முள்ளிவாய்க்கால் முடிந்து 7ம் ஆண்டுகள்.. ரகசியமுகாம்கள் கொலைவெறி இராணுவம் மூடப்பட வில்லை. அண்மையில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கூறினார் ‘வடக்கில் நல்லாட்சி நடந்தாலும் கோரமான இரணுவ ஆட்சிதான் நடைபெறுகிறது.’ இனவெறியர் அகற்றப்படவில்லை. இவை அகற்ற படாதவரையில் முள்ளிவாய்கால் கொலைகளுக்குள் இருந்து இனவழிப்பு எழும் என்பது ஆய்வு.

தமிழ்க்கட்சித் தலைவர்கள் துணைபோக நடக்கும் என்பதும் விமசகர்கள் கருத்து. தாய்மார்களின் கண்ணீர் அவலம் அலக்கழிப்புகள் ஏழாண்டுகளாகியும் தீரவழியும் இல்லை ஏறாத படிகள் ஏறியும் கணவன், பிள்ளைகள், உறவுகளைத் தேடி அலைவதும் கவணிப்பாரின்றி கேட்பாரின்றி பின் வீதிகளில் மறைமுகமாக தனித்துவிடப்பட்டு திசையறியாத கலமாக நிற்கும் நாதியற்ற போக்கு வித விதமான கண்ணீர் ஒலமாய் பெருகிய வடிவம் எடுக்கிறது.

அடுக்கடுக்கான போராளிகள் புற்றுநோயில் மயங்கி விழும் வியப்புக்குரிய விந்தையைச் சாதாரணமாக எண்ணிவிடவேண்டாம். புனர்வாழ்வளித்தபோது ஏற்றிய போலிமருத்துவ மருந்துகள் தாக்கமோ? புரையோடிய புல்லுரிவிகள் நஞ்சகச் சாணக்கி விதைப்பாகவும் இருக்கலாம்? இன்னும் வெளிவந்து வந்து மயங்கிய விழுவார்கள் தமிழ் அரசியல் கைகூலிகள் வாய்திறக்க மாட்டார்கள். பதவிக்கும் பணத்திற்கும் ஆபத்து வந்திடும் நடுக்கம் என்பதால் முள்ளிவாய்க்கால் 7ஆண்டுகள் கடந்து செல்லும் இவ்வேளையில் மரணங்கள் பற்றிய அதிசயத்திற்குரிய தகல்வகள் கவலைக்குரியதாகவே நீண்டுகொண்டிருக்கிறது.

முள்ளிவாய்க்காலோடு பயங்கரவாதம் அழிந்தது என்றால், பரவவிடக் கூடாது என்றால், இன்று உலகைக் கலக்கி கொண்டிருக்கிற ஐஎஸ் தீவிரவாதிகள் வந்தது எப்படி? தமிழீழம் தமிழனால் கொள்கைக்காகப் போராடிய விடுதலைப் புலிகள் புரிந்த சண்டை அற்பமாகத் தெரிந்ததால் தானா? போர்முறை தவறிய கேவலமான ஆயுதங்கள் பொசுபரசுக் குண்டுகள் கொத்துக் குண்டுகள் அயல்நாட்டு ஆள்பலத்தோடு தமிழனை அழித்தீர்கள்.

மானத்திற்கான நாடும் – தன்மானத்திற்கான மொழியும் – பூமிபந்தையே தூளாக்கும் தடந்தோள்களும் புலிகளிடம் இருந்த சக்தியோடு சிங்களம் தனித்துப் போரிட்டிருந்தால் உமி ஊதுவதுவோல் ஊதி தமிழீழ எல்லையை விட்டகற்றி நின்றயிடம் தெரியாமல் அழித்திருப்பார்கள். இன்று அற்பத்தனமான அறியாமையை மூடிமறைக்கச் சாட்சியங்கள் தேடி இழிவாக நடக்கின்றீர்கள். எங்கே பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது? எந்தப் போர் இழிவெனத் தெரிகிறது? முள்ளிவாய்க்கால் இனக்கொலைதான் இழிவென மனிதன் உணர்ந்துவிட்டான். புவி புரிந்துகொண்டது.

அன்று சர்வதேச நாடுகள் தமிழர்களின் நியாயபூர்வமான உணர்வாக எடுத்து தாக்குதலை நிறுத்தி இருக்கவேண்டும். சாக்குப்போக்குகளை சொல்லிக் கொண்டிருந்துவிட்டு இன்றும் குழப்பிக் குளறுபடியாக்கிக் கொண்டிருக்கிறது. கருத்துத் தெரிவித்தவர்கள் எல்லாம் சிறிலங்காவிற்குச் சார்பாகவே செயல்பட்டனர். அமெரிக்காவின் இரட்டைக் கோபுர அடி இடியாக விழுந்தது. 2001 பிரிட்டன் விடுதலைப் புலிகளை தடைசெய்து விட்டு’வன்முறையைப் பயன்படுத்துவதைக் காரணமாக வைத்து மே 2006 ஜரோப்பிய ஒன்றியத்தின் கூட்டம் விடுதலைப் புலிகளைத் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்தது.

விடுதலைப் புலிகள் பேச்சு வார்த்தைக்குத் திரும்ப வேண்டும்’ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்ற அறிக்கையைவிட்டு அச்சுறுத்தியது. 2006 கனடா ஏப்பிரல்10 தடைசெய்தது. இதுவெல்லாம் என்ன நியாயம். ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்கும், வன்னிப் படுகொலைகளுக்கும் இந்தியாவிடம் நீதி நேர்மையையும் எதிர்பார்ப்பது கொலைகாரனையே நீதிபதியாக்கித் தீர்ப்புச்சொல்ல வைப்பதற்கு சமம்.

ஈழத்தமிழர்களைக் கொலை செய்யத் துணைநின்ற இந்தியா மீதான இரத்தப்பழி நீங்காது. வரலாற்றில் முள்ளிவாய்க்காலில் படிந்துள்ளது. வங்காள விரிகுடாவின் கரையோரம் தீண்டுகிற அலைகள் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் இரத்தம் கலந்த கண்ணீர்க் குரலாய் விதவைகளின் விம்மலாய் நீதிகேட்டுக் கொண்டிருக்கும் 7ஆண்டுகள் ஆனபின்பும் என்ன. ‘ஒருபொழுதும் ஓயாது.’ ஒரு கொடுமையான கோரக் கொலைகள் கண்டும் ஊமைச் சாட்சிகளாக நின்றார்களே பரிதாபத்தை அவலத்தைப் பார்த்து கொண்டு தடுத்திடாது தண்டிக்காது மௌனமாக நின்றவர்கள்தான் பயங்கரவாதிகள்.

அறியாமை கொண்ட சிங்களத்தின் அழிவைத் தடுத்திருந்தால் மனிதாபிமானம் பேசுவது நியாயமானது. சிறிலங்கா செய்தது போர் என்று சொல்ல முடியாது. பயங்கரவாத அழிவு. கொடுமைகளையும் கேடுகளையும் விதைத்துவிட்ட இழிவானபோர் நடத்திவிட்டு ‘இனிப் போரே கூடாது’ கூப்பிட்டபடி சர்ச்சைகளையும் நொந்தரவுகளையும் விதைத்தபடி இருக்கின்றீர்கள் ‘சாம்பலாக்கிய இலட்சக்கக்கான உயிர்களையும் உடமைகளையும் எழுப்பித் தரமுடியுமா?

பழைய பகையை மறந்து ஒத்த கருத்துடைய நிலைக்கு சிங்களத் தலைவர்களால் வரமுடியாது. முள்ளிவாய்க்கால் தீயை மூட்டி திரும்பவும் புலிகளே வாருங்கள் நாங்கள் முள்ளிவாய்க்கால் தீயை மூட்ட மூச்சைப் பிடித்தபடி தமிழர்கள் சாம்பலை ஊதிக்கொண்டிருக்கிறோம் அதுவே சரத்பொன்சேகா, ராஜபக்ச கேடுகெட்ட வாசகங்கள் ஊதல்கள் காட்டுகிறது.

அங்கால ஒருபக்கம் அமைதி விரும்பிகளாக உலகம் தெரிந்து கொள்ள கபடநாடகம் நடக்கிறது தவிர அமைதியை நிலைநாட்டும் புதியநெறி எதுவுமில்லை. கிழநரி ஜெயவர்தனே வழி..வழிமொழிந்து நடக்கிறது. இழிவான போர் நடத்திய சிங்களத்து ரகசியம் பிரான்சுக்கும் இங்கிலாந்திற்கும் நடந்த மதத்தின் சிலுவைப் போர் ரகசியங்கள் போல் முள்ளிவாய்க்கால் கொலை ரகசியங்கள் கசியாது. போர்க்குற்றங்களும் தமிழினத்திற்கும் எதிரான குற்றங்களும் கலவரங்களும் நடப்பதற்கான வாய்ப்புகள் தான் அதிகரித்து வருவதால் தமிழன் ஏமாறமாட்டன் இனிமேல் தமிழன் நம்புவதற்கில்லை. பலகாலம் நம்பி ஏமாந்தவை இதயக் கல்வெட்டாகி உள்ளது.

இதைத்தான் தலைவர் பிரபாகரன் அடித்துச் சொன்னார் ‘ஜெயவர்த்தனா ஒரு நல்ல பௌத்தனாக இருந்தால் நான் ஆயுதம் தூக்கியிருக்க அவசியமில்லை. சிறிலங்காவின் அரசியலை அப்பட்டமாக்கியது ஜெயவர்த்னாவின் இடத்திலிருக்கும் நபர்கள் மட்டும் மாறுகிறார்கள். ஆனால் அரசியல் இனவெறி கொலை வெறித்தனம் மாறுவதில்லை. இனத்தினிடையே நல்லுறவு, மொழிகளிடையே நல்லிணக்கம், அடக்குமுறையில்லா அமைதி நிலை வேண்டுமானால் அகற்று சகல இராணுவத்தையும் சிங்களக் குடியேற்றங்களையும் சிங்களத் தேசியக் கருத்துக்களில் ஊறியவர்களிடமிருந்து தமிழ் மக்களுக்கான உரிமைகளையும் விடுதலையையும் எதிர்பார்க்க முடியாது.

தமிழ் கைக்கூலிகளும் இதை உணரவேண்டும். நாசத்தின் விளைவால் அழிந்தவற்றை ஆக்கித்தர ஒத்து வருவார்களா? சிங்கள இனவெறியர்கள் விழித்துக்கொண்டு நடப்பார்களா? பழைய பகையை மறந்து ஒத்தகருத்துடைய நிலைக்கு நடுநிலை தவறாமல் நிற்பார்களா? 1958முதல் தந்தையவர்களால் தொடங்கப்பட்டு பேரன் பிரபாகரனால் உலகரங்கை உலுப்பி 2016வந்து விட்டது பிணம் தின்னும் பேய்கள் வழிக்கு வரமாட்டார்கள். சிங்களவன் வேறு-தமிழன் வேறுதான் தமிழன் நடந்து கொண்டதை வரலாறு பேசும். சிங்களத் தலைமைகள் நடந்து கொள்வதை வரலாறு தூற்றும். முள்ளிவாய்க்கால் இனக்கொலைகள் நடந்து காலாவதியாகி 7ஆண்டுகள் கழிந்துவிட்டது இதற்குப் பின்னால் வரும் காலமும் இனவழிப்புத்தான் என்று குறிப்பிடத் தவறாது.

(www.eelamalar.com)