பதுளையில் தமிழ், முஸ்லிம் மக்களை மிரட்டும் வகையில் சுவரொட்டிகள்!

பதுளை வாழ் தமிழ், முஸ்லிம் மக்களை அச்சுறுத்தும் வகையில், சிங்கள மொழியிலான சில சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

‘சிங்களயாகே இவசீம பரீக்ஷா நொகரனு’ (சிங்களவர்களின் பொறுமையைச் சோதிக்காதே) என்று அச்சிடப்பட்டு, பதுளை முதியங்கனை ரஜமஹா விஹாரையின் பின்னால் செல்லும் பிரதான வீதியின் மதிலில் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் அண்மைய நாட்களாக தமிழ், முஸ்லிம் சமூகங்களை அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், குறித்த சுவரொட்டிகள் அப் பகுதி மக்களை பீதியடையச் செய்துள்ளன.