சிறிலங்கா துணை ஆயுத குழுகள் ஒன்றிணைவு?

கொலை அச்சுறுத்தல் விடுத்த முன்னாள் துணை ஆயுத கொலைக்குழுவான ரெலோ உறுப்பினரும் யாழ் மாநகர சபை பிரதி மேயருமான ஈசன் அவர்களை பாதுகாக்க முற்பட்டார் புளோட் என்னும் துணை இராணுவக் குழுவின் உறுப்பினர் தர்சானந்தன்.

��யாழ் மாநகர சபையின் உதவி நகர பிதாவினால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் மணிவண்ணன் அவர்களுக்கு மறைமுகமாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மணிவண்ணன் கொழும்புத்துறைக்குச் சென்று அபிவிருத்தி தொடர்பான விடயங்களை ஆராய்ந்தமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தது. �அதனால் பதற்றமடைந்த பிரதி மேயர் ஈசன் என்பவர் மணிவண்ணன் அவர்களுடன் உதவியாகச் சென்றிருந்த கொழும்புத்துறையை சொந்த இடமாகக் கொண்டவரான கனகசபை விஸ்ணுகாந்த் அவர்களை தொலைபேசியூடாக தொடர்புகொண்டு அச்சுறுத்தியிருந்தார்.

அது தொடர்பில் விஸ்ணு அவர்கள் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பில் இன்று யாழ் மாநகர சபை கூடியபோது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் கடுமையான கண்டனம் வெளியிடப்பட்டது.

அதன்போது குறுக்கிட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய முன்னாள் செயலாளரும் (2013இல் கைதான பின்னர் அரசுக்கு விலைபோனவர் ) புளொட் என்னும் துணை இராணுவக் குழுவின் சார்பில் மாநகரசபை உறுப்பினராக தெரிவான பதவி ஆசையும், விளம்பர ஆசையும் கொண்ட தர்சானந்த் என்பவர் வெளியில் நடைபெற்ற பிரச்சினை தொடர்பில் இங்கு பிரஸ்தாபிக்கத் தேவையில்லை என்று கூச்சலிட்டு கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்த ஈசன் என்பவரை பாதுகாக்க முற்பட்டுள்ளார்.

ஈசன் என்பவர் முன்னாள் துணை இராணுவக் குழுவான ரெலோ சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவரே.

அந்த அமைப்பு 1987 இல் இந்திய இராணுவத்துடன் இணைந்து பல கொலை கொள்ளை கற்பழிப்பு போன்ற கொடூரங்களை அரங்கேற்றியிருந்தது.

இந்தியப் ஆக்கிரமிப்புப் படைகள் இலங்கையிலிருந்து வெளியேறிய பின்னர் ஸ்ரீலங்கா பௌத்த பேரினவாதப் படைகளுடன் இணைந்து 20 ஆண்டுகள் அப்பாவித் தமிழ் மக்களை வவுனியாவிலும் ஏனைய மாவட்டங்களிலும் கடத்தி கொலை செய்தல் கப்பம் வாங்குதல் கற்பழித்தல் போன்ற கொடூரங்களில் ஈடுபட்டு வந்தது.

1999ஆம் ஆண்டில் யுத்த களத்தில் புலிகளது கை ஓங்கியதுடன் இனி புலிகளை அழிப்பது சாத்தியமற்றது என்பது தெரிய வந்த நிலையில் புலிகளின் காலில் விழுந்து மன்னிப்பு பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடாக பதவி பெற்றுக் கொண்டனர்.

எனினும் திரைமறைவில் புலிகளுக்கு எதிரான சதிகளை இந்திய இலங்கை அரசுகளுடன் இணைந்து மேற்கொண்டு வந்த இவ்வமைப்பு புலிகளது மௌனிப்புக்குப் பின்னர் மீண்டும் இலங்கை இந்திய அரசுகளின் கூலிகளாக வெளிப்படையாகவே செயற்பட்டு வருகின்றனர்.

�அந்த அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் சர்வதேச விசாரணை வேண்டாம் கொலை செய்த அரசே போர்க்குற்றங்களை விசாரிக்க சந்தற்பம் கொடுக்க வேண்டும் என ஜெனீவா வரை சம்பந்தன் குழும்பலில் ஒருவராகச் சென்று சர்வதேச நாடுகளை வலியறுத்தியவர்.

�தற்போது நாட்டிற்காக தயாரிக்கப்படும் புதிய அரசியல் யாப்பில் பௌத்தம் அரச மதம் என்பதனை ஏற்றுக் கொண்டுள்ளார்� வடக்கு கிழக்கு இணைப்பை கைவிடத் தயார் என ஒப்புதல் கொடுத்துள்ளார். �ஓற்றையாட்சியை ஏற்றுக் கொள்ள தயாரென ஒப்புதல் கொடுத்துள்ளார்.

சமஸ்டியை கோரவில்லை என ஒப்புக் கொடுத்துள்ளார். �வவுனியா மாவட்டத்தில் போகஸ்வவ என்ற பிரதேசத்தில் தமிழ் மக்களது காணிகளை அபகரித்து சிங்களவர்களுக்க நிரந்தரமாக வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். �ஆதற்குப் பிரதியுபகாரமாக குழுக்களின் பிரதி தலைவர் என்னும் எலும்புத் துண்டுப் பதவியை பெற்றுள்ளார்.

புளோட் என்ற துணை இராணுவக் குழுவும் 1987 இல் இந்திய இராணுவத்துடன் இணைந்து ஆயிரக்கணக்கான கொலை கொள்ளை கற்பழிப்பு போன்ற கொடூரங்களை அரங்கேற்றியிருந்தது. இந்தியப் ஆக்கிரமிப்புப் படைகள் இலங்கையிலிருந்து வெளியேறிய பின்னர் ஸ்ரீலங்கா பௌத்த பேரினவாதப் படைகளுடன் இணைந்து 20 ஆண்டுகள் அப்பாவித் தமிழ் மக்களை வவுனியாவிலும் ஏனைய மாவட்டங்களிலும் கடத்தி கொலை செய்தல் கப்பம் வாங்குதல் கற்பழித்தல் போன்ற கொடூரங்கில் ஈடுபட்டு வந்தது.

2009 மே; 18 இல் யுத்தம் ஓய்ந்த பின்னர் கூட செட்டிகுளம் சித்திரவதை முகாமிலிருந்தும் வவுனியா மாவடத்திலிருந்தும் பெருமளவான பொது மக்களையும் முன்னாள் போராளிகளையும் குடும்பங்களையும் கடத்தி காணாமல் போகச் செய்ததில் பெரும் பங்கு உள்ளதாக சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் பகிரங்கமாக குற்றம் சும்த்தியிருந்தன.

�அந்த அமைப்புடன் இணைந்து கொண்டுள்ள தர்சானந்தன் என்பவர் 2013ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் தினத்தை நினைவு கூர்ந்தமைக்காக கைது செய்யப்பட்ட மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளிளுடன் இவரும் கைது செய்யப்பட்டார் .

அந்த நிகழ்வை நடாத்தியதில் இவருக்கு எந்தப் பங்கும் இல்லாவிட்டாலும் மாணவர் ஒன்றிய செயலாளராக இருந்தமைக்காக கைதானார் . �இராணுவத்தினால் கைது செய்ப்பட்டிருந்தபோது ராணுவத்திற்கு விலைபோய்விட்டார் .

தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விடையங்களை இராணுவத்திற்கு வழங்குவதற்கும் மாணவர்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் நல்லுறவை ஏற்படுத்துவதற்குமான வேலைகளை பொறுப்பேற்றுக் கொண்டார் .

அதன் பிரகாரம் தனக்குப் பின்னர் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களில் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்களை இராணுவ உளவுத்துறையினரை சந்திக்க வைப்பதில் பெரும் அச்சுறுத்தல்களையும் நெருக்கடிகளையும் விடுத்து மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளை பலாலிக்கு அழைத்துச் சென்றிருந்தார் .

�2015ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பி மாவைக்கு வால்பிடித்து திரிந்த போதும் இவரிடம் தான் தோற்றுவிடக்கூடும் என்ற அச்சம் காரணமாக மாவை ஐயா கடைசி நேரத்தில் காலை வாரிவிட்டார்.

இதியில் இராணுவத்தின் துணையுடன் முன்னாள் துணை இராணுவக் குழுவான புளோட் சார்பில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றுக் கொண்டார் . � தீராத பதவி ஆசையும் விளம்பர ஆசையும் கொண்ட இவர் ஒற்றையாட்சியை தீர்வாக ஏற்றுக் கொண்டுள்ள சித்தார்த்தனை பலப்படுத்துவதில் குறியாயுள்ளார் .