சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா!

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள சசிகலா தாம் சரணடைய கால அவகாசம் கோரியதை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதையடுத்து சென்னையில் இருந்து புறப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரகார சிறை வளாக சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அஸ்வத் நாராயணிடம் இன்று மாலை சசிகலா, இளவரசி ஆகியோர் சரணடைந்தனர்.

பின்னர் இருவரும் சிறையிலடைக்கப்பட்டனர். வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள்தான் என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இருப்பினும் சுதாகரன் இன்னும் சரணடையவில்லை.