சுயேட்சையாக களமிறங்குகிறார் கருணா!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எந்த பெரும் கட்சிகளுடனும் இணையாது சுயேட்சையாக போட்டியிடப்போவதாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து கருணா அணி போட்டியிடவுள்ளதாக வெளியான செய்தி தொடர்பில் அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சி இன்னமும் பதிவு செய்யப்படாமையால், இம்முறை தேர்தலைச் சுயேட்சையாகக் களமிறங்கியே சந்திக்கவுள்ளோம். எந்தவொரு பெருங் கட்சிகளுடனும் சேர்ந்து செயற்படும் முடிவை நாங்கள் எடுக்கவில்லை.

‘இது நாங்கள் சந்திக்கும் கன்னித் தேர்தல். ஆகையால், எமது பலத்தை நிரூபிக்க நாங்கள் முழு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.