சூடு வைத்து சூடு வைத்து ……
சொல்லவேண்டியதை. சொல்லுகின்றோம்

தற்போது அரசியல் களத்தில் இருப்பவர்கள், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையை நோக்கி நகரக்கூடியதான
தீர்மானங்களையும்,
அரசியல் நகர்வையும்,
சரிவர எடுத்து தமிழீழ மக்களுக்கும் அடுத்த சந்ததியினருக்கு, பரப்புரை செய்து நடந்த விடுதலைப்போரையும்
விடுதலைத் தீர்மானங்களையும்
சிங்களவனினால் தொடர்ந்து தமிழர்கள் ஏமாற்றப்படுவதையும்
சிறிதும் மாறாமல் சொல்லி பரப்புரைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் தமிழர்களுக்கான விடுதலை அதாவது தனி நாட்டு. விடுதலையை பெற்றுக்கொடுப்பதோ உங்கள் கடமை ..
அன்றி பெற்றுக்கொடுப்பதாக
ஏமற்றுவதோ அல்லது சிங்களவனுடன் சேர்ந்து நாடகம் ஆடுவதையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை….

தமிழீழக் கொள்கை நிலையிலிருந்து கீழிறங்கி அல்லது சுதந்திரமும் இறைமையுமுள்ள தனியரசு என்பது சாத்தியமில்லை”
என்ற கருத்துக்களை விதைத்தாலும் விதைக்க முற்ப்பட்டாலும் அது உங்களுக்கான சாவுமணியாக்க்கூட இருக்கலாம் .அதாவது உங்களை உருவாக்கியதும் தமிழர்களே உங்களை. அழிக்கப்போவதும் தமிழர்களே என்பதை மறக்க வேண்டாம் ..

அதுபோக சிங்களவனுடனான ரகசிய பேச்சுவார்த்தைகளை தமிழர்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தவும் வேண்டும்…

தனியரசு என்ற அரசியல் தீர்மானத்தின் சொந்தக்காரர்கள் ஈழத் தமிழ் மக்கள் மட்டுமே. ஏனெனில் 37 வருட போராட்ட காலத்தில் விடுதலைக்காக ஆகுதியாகிப் போனவர்களும் மற்றும் சொல்லொணா துயரங்களைத் தாங்கிய மக்களுமே..
மற்றும் வலுவையும், பலத்தையும் சேர்த்த புலம்பெயர் மக்களும்மே உரித்துடையவர்கள்
தமிழ்மக்களின் அரசியல் விடுதலை நோக்கிய பயணத்தில் அளப்பரிய தியாகங்களையும் உழைப்பையும் வழங்கிய நேரடிப்பங்காளர்கள்
இருப்பதும் தமிழர்களே. இதற்காக அவர்களின் வலியை இப்போதுள்ள அரசியல் வாதிகளால் புரிந்துகொள்ள முடியதுள்ளது என்பதே உண்மை….