ஜகத் ஜயசூரிய குற்றங்களில் ஈடுபட்டவர் – சரத் பொன்சேகா

முன்னாள் இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரிய இராணுவக் குற்றங்களில் ஈடுபட்டவர் என

அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

எனவே அவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் தான் சாட்சியமளிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடசந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜயக் ஜயசூரிய இராணுவத் தளபதியாக இருக்கத் தகுதியற்றவர் என்றவர் எனவும்,அவரை தனக்குப் பின்னால் இராணுவத் தளபதியாக்க வேண்டாம் என மஹிந்தவின் ஆட்சியாளர்களிடம் தான் சுட்டிக்காட்டியதாகவும் அமைச்சர் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் யுத்த காலத்தில் அவர் பல குற்றங்களில் ஈடுபடுவதாக தனக்கு முறைபாடு கிடைக்கப் பெற்றதாகவும் அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.