ஜெனிவா நெருக்கடியில் சிக்கிய இலங்கை! காப்பாற்றும் முயற்சியில் ட்ரம்ப் நிர்வாகம்

ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை எதிராக கலந்துரையாடப்பட்ட யோசனை தொடர்பில் ஆய்வு செய்ய அமெரிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பாக கலந்துரையாட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் விசேட பிரதிநிதி ஒருவர் வருகைத்தந்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்பின் அலுவலக பிரதிநிதி ஜெனிவாவில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க பிரதிநிதி தன்னுடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமை செயற்பாடு மற்றும் இன ஒற்றுமை தொடர்பில் அமெரிக்கா அவதானத்துடன் உள்ளதாக குறித்த பிரதிநிதி குறிப்பிட்டுள்ளதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பான மனித உரிமை ஆணைக்குழுவில் சமர்பித்த யோசனைக்கு அமெரிக்க ஆதரவு வழங்கியுள்ளது. டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியான பின்னர் அவர் ஊடாக நன்மை பெற்றுக் கொள்ள கனவு கண்டவர்களின் கனவு கலைந்து விட்டதாகவும் அமைச்சர் மங்கள மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(www.eelamalar.com)