தமிழர் தாயகம் என்பதன் தாற்பரியம் இப்போது புரிகிறதா?

பெரும்பான்மை இன மக்களுடன் வாழு கின்ற சிறுபான்மை இன மக்கள் எந்த நேரமும் எந்த ஆபத்தையும் சந்திக்கின்ற நிலையிலேயே உள்ளனர் என்பது இப்போது உறுதியாகிவிட்டது.

பெரும்பான்மை இன மக்கள் வாழுகின்ற பிரதேசங்களில் தமிழ் மக்கள் வாழலாம். ஆனால் தமிழ் மக்கள் வாழுகின்ற இடங் களில் பெரும்பான்மை இனமாகிய சிங்கள மக்கள் குடியமர்ந்தால் என்ன பிரச்சினை என்ற கேள்வியை அமெரிக்கா, இந்தியா உள் ளிட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகள் அடிக்கடி கேட்டதுண்டு.

இந்தக் கேள்விக்கு தமிழ் மக்களின் பண் பாடு, கலாசாரம் கட்டமைப்பு என்பவற்றின் தனித் துவம் பற்றி எடுத்துக் கூறப்படுவது வழமை.
இங்குதான் ஓர் உள்ளார்ந்தமான உண்மை உள்ளது.
அதாவது தமிழ் மக்களின் பாதுகாப்பு என்பதே இங்கிருக்கக்கூடிய உள்ளார்ந்த விடயமாகும்.

சிங்கள மக்கள் வாழுகின்ற இடங்களில் தமிழ், முஸ்லிம் மக்கள் வாழுகின்ற போதிலும் அவர்களின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பு என்பது சிங்கள மக்களின் கையிலேயே உள்ளது.

நிலஅதிர்வு, கடல் கொந்தளிப்பு உள்ளிட்ட இயற்கை அனர்த்தம்போல சிங்கள மக்களும் எந்த நேரம் கொதித்தெழுந்தாலும் அதற்குப் பலியாகப் போகின்றவர்கள் சிறுபான்மை மக் கள் என்பதே உண்மை.

இதற்கு கண்டியில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சிங்களப் பேரினவாதம் நடத்திவரும் வன்செயல் தக்க சான்றாகும்.

ஆக, பெரும்பான்மையுடன் சேர்ந்து வாழும் சிறுபான்மை மக்களின் வாழ்வை சிங்களத் தரப்புக்களே தீர்மானிக்கின்றன என்பது வெளிப் படையான உண்மையாகும்.

இத்தகைய ஆபத்தான சூழ்நிலையில்தான், தமது பூர்வீகமான தமிழர் தாயகம் என்பதன் அவசியத்தை தமிழ் மக்கள் வலியுறுத்தி நிற்கின்றனர்.

எனவே தமிழ் மக்கள் வலியுறுத்துகின்ற தமிழர் தாயகம் என்பதற்குள் இருக்கக்கூடிய நியாயத்தை சர்வதேச சமூகம் இனிமேலாவது புரிந்து கொள்ளும் எனலாம்.
எதுஎவ்வாறாயினும் இப்போது இருக்கின்ற சூழ்நிலையில் இன வன்செயல்களை அடியோடு நிறுத்துவது தொடர்பில் இலங்கை ஆட்சித் தரப்பு உறுதியாக இருக்க வேண்டும்.

இதனைச் செய்வதற்காக இனவாதம், மத வாதம் பேசும் பெளத்த பிக்குகள் மீது கடும் நட வடிக்கை எடுப்பது கட்டாயமானதாகும்.
பெளத்த தர்மத்தைப் பின்பற்றுவதாகக் கூறி பெளத்த துறவிகளானவர்கள் இனக் கலவரங்களைத் தூண்டி மனிதவதை செய்ப வர்களாகவும் சொத்துக்களை அழிப்பவர் களாகவும் இருப்பது எந்த வகையிலும் ஏற் புடையதல்ல.

எனவே இனவாதம் பேசுகின்ற பெளத்த துறவிகள் எவராக இருந்தாலும் அத்தகைய வர்களின் மதகுரு என்ற அங்கீகாரம் இரத்துச் செய்யப்பட்டு சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டு தண்ட னைக்குரியவர்களாக ஆக்க வேண்டும்.
அப்போதுதான் இன வன்செயல்கள் அடி யோடு அறுந்து போகும்.