03

தமிழர் மீதான ஜுலை கலவரத்தின் 31 ஆண்டு பூர்த்தி இன்று

இலங்கையில் கறுப்பு ஜுலை கலவரம் ஏற்பட்டு இன்றுடன் 31 வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில் நாட்டில் உண்மையான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் உள்ள நாடு என்ற வகையில் இலங்கையின் முக்கிய விடயங்களை தைரியமாகவும் நேர்மையாகவும் எடுத்துரைக்க வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

1983 ஆம் ஆண்டு ஜுலை 23 ஆம் திகதி தமிழ் மக்களை சூழ்ந்து பரவலாக வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள தேசிய சமாதானப் பேரவை , இந்த வன்முறைகளைத் தொடர்ந்து இலங்கை சர்வதேச ரீதியில் மதிப்பை இழந்ததாகவும் கூறியுள்ளது. தமிழ் மக்கள் மத்தியில் தரமிக்கவர்களை அடையாளம் காட்டிய இந்த கலவரம்  நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் போக்கில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதிக செலவுமிக்க கொடூரமான மூன்று தசாப்த யுத்தத்திற்கு  வித்திட்டிருந்த இந்தக் கலவரம் சமூகத்தில் இழையோடியிருந்த கட்டுக்கோப்பை சிதைத்ததுடன் தேசிய பொருளாதாரத்திற்கும் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது.

04 02 01