i love tamil eelam

ஊடகவியாளரை பதிலால் தினறடித்த தலைவர்

ஒரு முறை தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களிடம் ஊடகவியாளர் சந்திப்பில் நிருபர் ஒருவரினால் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. ‘நீங்கள் தமிழ் ஈழம், தனி நாடு என்று சொல்லிப் பேசுகிறீர்கள். இந்தத் தமிழ் ஈழம் எங்கே இருக்கிறது. இதன் எல்லைகள் என்ன?’ பிரபாகரன் ஒரு கணம் திகைத்து நின்றார். சிறிது அவகாசம் எடுத்து, தன்னை மீட்டுக்கொண்டு அவர் இப்படிப் பதில்அளித்தார். ‘இலங்கைத் தீவின் வரைபடத்தையும் சிறிது வண்ணக் கலவையையும் ஒரு தூரிகையையும் கையிலே எடுத்துக்கொள்ளுங்கள். இலங்கையில் எந்தெந்தப் பகுதிகளில் குண்டுகள் விழுகின்றனவோ, எந்தெந்தப் பகுதியில் பீரங்கி வெடித்து அழிவுகள் நடக்கின்றனவோ, எந்தெந்த இடங்களில் தமிழ்ப் பெண்கள் சிங்கள ராணுவத்தினரின் வன்முறைக்கு ஆளாகி அவலப்படுகிறார்களோ, அந்தந்த இடங்களை எல்லாம் வரைபடத்தில் வண்ணம் தீட்டுங்கள். முடிவில் வண்ணம் பூசப்பட்ட அந்தப் பகுதிதான் தமிழீழம். அதுதான் எங்கள் எல்லைகள்!’

(www.eelamalar.com)