தமிழீழத்தில் காளியம்மன்!
திருநெல்வேலி காளியம்மன் அலங்காரத் திருவிழாவில், தமிழீழத்தில் காளியம்மன் இருப்பதுபோல் சித்தரித்து அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக, ஆலய நிர்வாகத்தினர், பூசகரை இராணுவப் புலனாய்வாளர்கள் விசாரணைக்கழைத்துள்ளனர்.
திருநெல்வேலி ஸ்ரீ காளி அம்மன் ஆலய வருடாந்த அலங்காரத் திருவிழா நடைபெற்றுவரும் நிலையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற 3ஆம் நாள் திருவிழாவின்போது காளி அம்மன் புலி வாகனத்தில் தமிழீழத்தில் வலம்வரும் வகையில் அலங்கரிக்கப்பட்டு அடியவர்களுக்கு காட்சியளித்தார்.
குறித்த படம் மற்றும் காணொளிகள் ஊடகங்களில் பிரசுரமானதையடுத்து தற்போது புலனாய்வாளர்கள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.