உலகின் ஒரு மூலையில் மிகச்சிறியதோர் கூட்டத்திலிருந்து உலக நாடுகள் வியக்கும் வண்ணம் முன்னுதாரணமானதோர் விடுதலைப் போராட்டத்தை கட்டியெழுப்பியவர் எங்கள் தலைவர்..

our-flagநாற்புறமும் கடல்நீர் சூழ்ந்துள்ள சிறியதோர் நிலப்பரப்பில் சிறீலங்காவோடு சுற்றியிருக்கும் பெரிய நாடுகளான இந்தியா,சீனா,பாக்கிஸ்தான் நாடுகளினது நெருக்குவாரங்களுக்கு முகம்கொடுத்து மரபுவழி தாக்குதல் படையணிகள்,சிறப்பு படைபிரிவுகள்,பீரங்கிப்படை பிரிவு,கடற்படைபிரிவு,உலக உளவு அமைப்புகள் மெச்சும் மிகத்திறன் கொண்ட புலனாய்வுத்துறை,70க்கும் மேற்பட்ட கப்பல்களை கொண்ட அனைத்துலக ஆயுத கொள்வனவுப் பிரிவு,அரை உரிமம் கொண்ட செயற்க்கைகோள்.

இவற்றிக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் 2002ம் ஆண்டுமுதல் ஒரு அரசுக்கு இருக்கவேண்டிய அனைத்து துறைசார் அலகுகளுடன் கூடியதோர் நடைமுறை அரசை உருவாக்கி பல உலக நாடுகள் வியக்கும் வண்ணம் மிக நேர்த்தியான முறையில் அதனை நிர்வகிக்கும் திறனும் கண்ணியமும் ஒழுக்கமும் கொண்ட நிர்வாக ஏற்பாட்டையும் உருவாக்கி சாதனை செய்தவர் எம் தேசபெருந்தலைவர்.

உலகெங்கும் யூதர்கள் இருந்தாலும் இஸ்ரேல் அவர்கள் உரிமைப் பூமியாய் இருப்பதுபோல உலககெங்கும் கோடிக்கணக்கான தமிழர்கள் வாழ்ந்தாலும் தம் இனத்திற்கென்று ஒரு நாடிருக்கின்றது என்று பெருமையுடன் பேசும் நிலைக்கு மிக அருகில் தமிழினத்தை கொண்டுவந்தவர் எங்கள் தேதியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.இந்த நிலையை தமிழினம் அடைவதற்க்கு அவர்பட்ட கஷ்டம்,துன்பம்,துயரம்,இன்னல்,இடர்,இழப்பு கொஞ்சநஞ்சமல்ல.தன் பள்ளி பருவம் தொடங்கி தன் வாழ்நாள் முழுவதையும் தமிழ் மக்கள் விடிவிற்காகவே அர்பணித்துக்கொண்ட உலகின் ஒப்பற்ற தலைவன் எம் அண்ணண்.

“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”

-பிரபாசெழியன்.

(www.eelamalar.com)