விடுதலை புலிகளின் பாடல் படித்து பாருங்கள்
———————————————————–

குண்டு விழுந்தால் என்ன
வீடு குலுங்கி இடிந்தால் என்ன
உடல் துண்டு பறந்தால் என்ன நாங்கள் துடித்து மடிந்தால் என்ன 
தமிழீழ தாகம் தனியாது எங்கள் தாயகம் யாருக்கும் அடிபணியாது

பஞ்சம் நெகிழ்ந்தால் என்ன
நாடு பசியால் மெலிந்தால் என்ன அது பிணமாய் விழுந்தால் என்ன
தமிழீழ தாகம் தனியாது எங்கள் தாயகம் யாருக்கும் அடி பணியாது

உறவை பிரிந்தால் என்ன
ஊர் ஊராய் அலைந்தால் என்ன
பிடித்து சிறையில் அடைத்தால் என்ன
நாங்கள் செத்து தொலைந்தால் என்ன தமிழீழ தாகம் தனியாது எங்கள் தாயகம் யார்க்கும் அடி பணியாது….