LTTE-Logo

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி

12 நாடுகளும் 26 அரச சார்பற்ற நிறுவனங்களும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிதியுதவி அளித்துள்ளதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் முல்லைத்தீவில் மீட்கப்பட்ட இரகசிய கணக்கு ஆவணத்தின் ஊடாக இந்த தகவல் வெளியாகியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 133 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை குறித்த நாடுகள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் ஊடாக புலிகள் இயக்கத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழர் புனர்வாழ்வு கழகத்தினூடாக (Tamils Rehabilitation Organisation) அவுஸ்திரேலியா, பொஸ்ட்வானா, அமெரிக்கா, கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஜேர்மனி, நோர்வே, நியூசிலாந்து, சுவீடன் மற்றும் பிரித்தானிய உள்ளிட்ட நாடுகள் புலிகளுக்கு நிதியுதவி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புலிகள் இயக்கத்தின் ஆயுத கொள்வனவிற்காக குறித்த நிதியை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதோடு, அந்த இயக்கத்தின் தலைவர் பிரேம ரஜித பிரித்தானியாவில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(www.eelamalar.com)