தமிழ்மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற தலைமையையும் விட்டுக்கொடுக்கத் தயார்- ஆனந்தசங்கரி

தமிழ் மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகின்றார்கள் எனவே அவா்களின் விருப்பத்திற்கு அமைவாக எல்லோரும் ஒற்றுமையாக ஒன்றுதிரண்டு வந்தால் நான் கடசித் தலைமையையும் விட்டுக்கொடுக்கத் தயார் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

20.12.17 கிளிநொச்சியில் உள்ளூராட்சிசபை தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவா் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

இந்த முறை தமிழ் மக்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். அவ்வாறு சிந்திக்காவிடின் அவர்களின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று கடவுள்தான் சொல்ல வேண்டும்.

இன்றும் காலங் கடந்து விடவில்லை மாறுபட்டு தேர்தல் கேட்கின்றவா்கள் ஒன்றாக வந்தால் நான் தலைமையையும் விட்டு்க்கொடுக்கத் தயாராக உள்ளேன். தெரியாத ஊருக்கு பாதை காட்டுவதனை விடுத்து தெரிந்த ஊருக்கு பாதை காட்டுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.