தர்மம் ஒருநாள் தலையை நிமிர்த்தி தலைவன் கதை கேட்கும்..!!

அதர்மம் புரிந்த அரசின் கொடுமை அதிர்ந்து தலைசாயும்

உலகம் உணர்த்திய பாடம் இதை உணரும் வரைக்கேடாகும் -2

தர்மம் ஒருநாள் தலையை நிமிர்த்தி தலைவன் கதை கேட்கும்..!!

அதர்மம் புரிந்த அரசின் கொடுமை அதிர்ந்து தலைசாயும்

ஆயிரம் காலங்கள் தொடரும் கொடுமையும் முடிவினில் முடிவாகும்
இதுவரையறை இன்றியே வடித்த கருக்களின் உயிரின் கதையாகும்

நீதி சரிந்து விடாது.. 
அநீதியும் தொடர்ந்து இருக்காது..-2

தர்மம் ஒருநாள் தலையை நிமிர்த்தி தலைவன் கதை கேட்கும்..!!

அதர்மம் புரிந்த அரசின் கொடுமை அதிர்ந்து தலைசாயும்

வீதி தெருவிலும் வீடு வெளியிலும் ஓடி அலைந்திருந்தோம்
நாதியற்றவர் கேடு புரியவும் நாடி வருந்தி நின்றோம்..

கொடிய நெருப்பிலும் நடந்தோம்..
நாம் கொண்ட கொள்கையில் கிடந்தோம் -2

தர்மம் ஒருநாள் தலையை நிமிர்த்தி தலைவன் கதை கேட்கும்..!!

அதர்மம் புரிந்த அரசின் கொடுமை அதிர்ந்து தலைசாயும்

திருகும் நெஞ்சினில் நீரை ஊற்றிய தலைவன் வழிநடந்தோம்
எதையும் தாங்கிடும் இதயம் உடையவர் தமிழர் அதை மறவோம்

அமைதி பெற வரும் நாடு…
தமிழீழம் எமது உயிர்க் கூடு -2