போராட்டமே தமிழனின்
வாழ்வியல் வரலாறாகிவிட்டது…

வரலாற்று பாதையிலே
தலைவனின் படையணி
மீண்டும் நகரும்
பகைவனே காத்திரு
நாம் புலியாக வருவோம்
போராட்ட களங்களை
நாங்கள் மறந்துவிடவில்லை
வரிப்புலியாய் நாம்
நடந்த தேசமதை
நாங்கள் மறந்திடவில்லை
விலை போன மனிதர்கள்
மத்தியிலும் தன் மான
தமிழராய் வாழ்ந்து
கொண்டிருக்கின்றோம்
என்னும் நாங்கள் ஈழத்திலே
புலிப்படை நிமிரும்
போர்க்களம் அதிரும்
புயலாகி பகைமீது
சுழன்றாடுவோம்
போராட்டமே தமிழனின்
வாழ்வியல் வரலாறாகிவிட்டது…

சிவா தமிழீழம்….!!