அன்புக்குரிய உறவுகளே தலைமையின் இருப்புக்குறித்து மக்கள் அச்சமடையத்தேவையில்லை.

முள்ளிவாய்க்காலில் எமக்கு களத்தில் எதிர்பாரதவிதத்தில்
பின்னடைவு ஏற்ப்பட்டதனால் எமது தலைமையையும்,மக்களையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தினால்
போராட்டத்தின் வடிவத்தை மாற்ற வேண்டிய தேவை ஏற்ப்பட்டது

தலைவரும், தலைவருடைய பாதுகாப்பு அணிகளும்,சில தளபதிகளும் பாதுகாப்புடன் இருக்கின்றார்கள். தலைவரும்,சில தளபதிகளும் இணைந்து
முள்ளிவாய்க்கால் பின்னடைவுக்குப் பின்னர் கற்றுக்கொண்ட
பாடங்களை வைத்து எமது தாயகப்பிதேசத்தை எதிரியிடமிருந்து
மீட்டு மக்களை காப்பாற்றுவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை
தொடர்பான ஒழுங்கமைப்பை செய்து வருகின்றார்கள்.தலைவரினால் இரகசியமான முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட
தமிழீழவிடுதலைப்புலிகளின் சர்வதேச கட்டமைப்பு தொடர்ந்தும்
இரகசியமான முறையில் செயல்ப்பட்டு வருகின்றது.சர்வதேசமோ அல்லது இலங்கை இராணுவப்புலனாய்வாளர்கள்
எமது சர்வதேசக்கட்டமைப்பை நெருங்கமுடியாது.பெரிய கழுகு போல்
வலைபோட்டுத்தேடுகின்றது.எமது தலைமைக்கட்டமைப்பைக்
கண்டுபிடித்து எமது செயல்ப்பாட்டை முடக்குவதற்காக சர்வதேசத்தினாலோ அல்லது எந்தக்கொம்பனாலும் எமது தலைமைக்கட்டமைப்பையோ அல்லது தலைமையின் நிழலைக்கூட நெருங்க முடியாது.இறுதி நாள் வரைக்கும்
தலைவருக்கு அருகில் நின்று களமாடிய போராளிகள் நாங்கள்
முள்ளிவாய்க்காலில் எமக்கு களத்தில் எதிர்பாரதவிதத்தில்
பின்னடைவு ஏற்ப்பட்டதனால் எமது தலைமையையும்,மக்களையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தினால்
போராட்டத்தின் வடிவத்தை மாற்ற வேண்டிய தேவை ஏற்ப்பட்டது.அதற்கேற்ற வகையில் தலைவரும்,தலைவருடைய
பாதுகாப்பு அணிகளும்,சில தளபதிகளும் பாதுகாப்பான இடத்திற்க்கு நகர்த்தப்பட்டுள்ளார்கள்.எமது வேவு அணியினால்
இரகசியமான முறையில் வடிவமைக்கப்பட்ட பாதையினால்
மிகவும் பாதுகாப்பான முறையில் பாதுகாப்பான இடத்திற்க்கு
அனுப்பிவைக்கப்பட்டு தலைவரும் அவருடைய பாதுகாப்பு
அணிகளும் பாதுகாப்புடனும் நலமாகவும் இருக்கின்றார்கள்.
நாங்களே தற்ப்போது பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் போது
தலைமையை தற்ப்போதைய நிலையில் வெளிக்கொண்டு வந்து
பாதுகாக்கமுடியாது.

சரியான நேரத்தில் தலைவர் வெளியில்
வருவார். தலைவருடைய தலைமையில் அடுத்தகட்ட ஈழப்போர்
வெகுவிரைவில் ஆரம்பமாகும் இது உறுதி. மக்களே தலைவருடன் அருகில் இருந்த போராடிய நாங்கள் உயிருடன் இருக்கும்
போது சிந்தித்துப்பாருங்கள் எங்கள் தலைவரின் உயிருடன் இருக்கமாட்டாரா?எங்களையும் இறுதிப்போரிலே கொல்லப்பட்டு விட்டதாகத்தான் அறிவித்தார்கள்.நாங்கள்
உயிருடன் இல்லையா?மக்களின் மனநிலைகளில் குழப்பங்களை ஏற்ப்படுத்தி மக்களின் போராட்டச்சிந்தனையை
மாற்றி தமிழீழவிடுதலைப்போராட்டத்தின் வீச்சைக் குறைக்கும்
நோக்கில் இராணுவப்புலனாய்வாளர்களும்,அவர்களுடன்
சேர்ந்து சர்வதேசப்பணிக்காக தலைமையினால் புலம்பெயர்
நாடுகளுக்கு 2009ம் ஆண்டிற்கு பின் அனுப்பிவைக்கப்பட்ட ஒரு சில போராளிகளும்
இறுதிக்கட்டப்போரினிலே தலைமை வீரச்சாவடைந்து விட்டதாகவும் அடுத்தகட்ட தமிழீழவிடுதலைப்புலிகளின் தலைமையை தாங்கள் ஏற்று நடத்தப்போவதாகவும் பொய்யான
பரப்புரைகளை வழங்கி மக்களை குழப்பி வருகின்றார்கள்.

இவர்களின் பொய்யான பரப்புரைகளை நம்பி மக்கள் ஏமாந்து
போகவேண்டாம்.புலிச்சாயம் பூசி மக்களை ஏமாற்றுபவர்களின்
முகத்திரை வெகுவிரைவில் கிழித்தெறியப்படும்.மக்கள் அன்று
உண்மை நிலையை அறிந்துகொள்வீர்கள்.தமிழீழவிடுதலைப்
புலிகளின் தலைமைக்கட்டமைப்பு தற்ப்போது உத்தியோக
பூர்வமாக செயல்படவில்லை.மக்கள் போலிகளைக் கண்டு
ஏமாந்து போகாமல் நம்பிக்கையுடன் காத்திருங்கள் தலைவன்வருவான் தமிழீழம் மீட்டுத்தருவார்.

நன்றி…

“புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்”

செல்வன் விடுதலைப்புலி