தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரனைத் தேடும் இஸ்லாமிய தமிழர்கள்…!

‘பிரபாகரன் மீண்டும் எப்போது வருவார்?’


இது தமிழர்களிடம் மட்டுமே தொக்கி நின்ற கேள்வி. இப்போது, இலங்கையின் முஸ்லீம் மக்கள் மத்தியிலும் பரவியுள்ளது.
‘பிரபாகரன் இருந்திருந்தால், எங்களுக்கு இந்த நிலை வந்திருக்காது’ என்று கண்ணீர் விட்டு அழுதார் ஒரு முஸ்லீம் பெண். ‘எங்கள் சமூகத்தில், ஒரு பிரபாகரன் உருவாகவேண்டும்’ என்று அங்கலாய்த்தார் ஒருமுஸ்லீம் பெரியவர். இது அடையாளங்கள் மட்டுமே. பெரும்பாலான முஸ்லீம் மக்கள் தங்களுக்கான பிரபாகரனைத் தேட ஆரம்பித்துவிட்டார்கள்.

சிங்கள மக்கள் போலவே, இன முரண்பாட்டை அரசியலுக்கான தேவையாக இஸ்லாமியத் தலைவர்களும் மேற்கொண்டிருந்த காரணத்தால், தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டத்தின் தேவையை இஸ்லாமிய மக்களால் உணர முடியாமல் போய்விட்டது. விடுதலைப் போராட்டத்தினைத் தோற்கடிப்பதற்கான பெரும் பங்கும் அவர்களால் சிங்களப் படைகளுக்கு வழங்கப்பட்டது. தமிழ் மக்கள் மீது சிங்கள இனத்தால் மேற்கொள்ளப்பட்ட இன ஒடுக்கல் வன்முறைகளையும், பேரழிவுகளையும், படுகொலைகளையும், போர்க் குற்றங்களையும் அவர்கள் கண்டுகொள்ளத் தவறியதன் பலனைக் காலம் கடந்து உணர்ந்து கொள்கின்றார்கள்.

சிங்கள இனவாதம் கட்டற்ற மூர்க்கத்தனத்தை அடைந்துவிட்ட காலத்தில், முஸ்லீம் மக்கள் பிரபாகரனைத் தேடுகின்றார்கள்
. தேடியேதான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் அவர்களது இயல்புகளை மீறி உருவாக்கப்பட்டு விட்டது. சிங்கள இனவாதம் என்பது, வெறுமனே தமிழர்கள்மீதான குரோதத்தின் வெளிப்பாடல்ல. மாறாக, வரலாற்று நம்பிக்கையின் தொடர்ச்சி அது. பௌத்த – சிங்கள மக்களுக்காக புத்தரால் வழங்கப்பட்ட தேசமாக பிக்குக்களால் புனையப்பட்ட ‘மகாவம்சம்’ குறித்த அதீத நம்பிக்கை. இலங்கைத் தீவின் நிலங்களும், வளங்களும், கடல்களும், மலைகளும் என அத்தனையும் தங்களுக்கு மட்டுமே ஆனதாக அவர்கள் இப்போதும் தீவிரமாக நம்புகின்றார்கள்.
சிங்கள மக்களிடம் விதைக்கப்பட்ட இந்த நம்பிக்கையில் தளர்வு ஏற்படாத வரையில், அவர்களிடம் நோயாகக் காவப்பட்டுவரும் இனக் குரோதங்கள் முடிவுக்கு வந்துவிடப் போவதில்லை. அதற்கு, தமிழர், முஸ்லீம், பறங்கியர் என்ற எந்தப் பேதமும் இருக்கப் போவதில்லை. அவர்களுக்கேயான, நிலத்தையும், வளத்தையும், கடலையும், மலைகளையும் அவர்கள் யாருடனும் பங்கு போடத் தயாராக இல்லை. அதை, அவர்கள் சகித்துக் கொள்ளப் போவதில்லை. அதன் வெளிப்பாடே தமிழர்கள் மீதான யுத்தம். அதன் தொடர்ச்சியே முஸ்லீம்கள் மீதான தாக்குதல்கள்.


தமிழர்கள் அழிக்கப்பட்டு விட்டார்கள். அவர்களது வாழ் நிலங்கள் கட்டற்ற முறையில் அபகரிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மக்கள் முற்றாகவே சிங்கள இராணுவத்தின் சுற்றிவழைப்புக்
களுக்குட்படுத்தப்பட்டுள்ளதால், அவர்கள் மீதான குரோதங்கள் தேவையற்ற நிலையில், சிங்கள இனவாதத்தின் இலக்கு முஸ்லீம் மக்களை நோக்கித் திருப்பப்பட்டுள்ளது. மகாவம்ச வெறியுட்டலின்படி, சிங்கள மக்களுக்கே உரிய வளத்தின் ஒரு பகுதியை முஸ்லீம் மக்கள் கையகப்படுத்தியுள்ளார்கள்.

வர்த்தகத்திலும் அவர்களது கைகள் மேலோங்கி வருகின்றது. அதை விடவும் முக்கியமாக, சிங்கள இனவாதத்தை, முஸ்லீம் மக்களது மனித வளப் பெருக்கமும் சிங்கள இனவாத்திற்கு மிகப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மக்கள் மீதான சிங்கள இனவாத்தித்தின் தாக்கத்தால், தமிழர்களில் அரைப் பங்கினர் புலம்பெயர்ந்து விட்டார்கள். அது, இப்போதும் தொடர்கின்றது. அத்துடன், பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள தமிழ் மக்கள் தீவிரமான குடும்பக் கட்டுப்பாட்டையும் மேற்கொண்டு வருகின்றனர். அல்லது, அவ்வாறு நிர்ப்பந்திக்கப
்பட்டுள்ளனர். இதற்கு நேர் மாறாக, சிங்கள மக்களிடம் இனப்பெருக்கத்திற்கான ஊக்குவிப்பு மேற்கொள்ளப்படுக
ின்றது. நான்காவது பிள்ளைக்கு ஒரு இலட்சம் ரூபாய் சன்மானம் என்ற சிங்கள அரசின் அறிவிப்பு சிங்களப் படைகளுக்கு மட்டுமானதல்ல, அதற்கும் மேலாக, தமது பெரும்பான்மையை உறுதி செய்யும் சிங்கள இலக்கின் ஒரு வடிவமே அது.
பெருகிவரும் சிங்ள மக்கள் தொகைக்கு வேண்டிய நிலமும், வளமும் பெருகப்போவதில்லை. எனவே, வெறியூட்டலுக்கு
ள்ளாக்கப்பட்ட சிங்கள இனம், தமது அதிகரித்துவரும் தேவைகளுக்காக, தொடர்ந்தும் அங்கு வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள்மீது தங்களது பலத்தைப் பிரயோகித்து, தங்களுக்குத் தேவையானவற்றை அபகரிக்கவே போகின்றார்கள். அதுவே, இப்போது தமிழர் தாயகத்தில் நிகழ்ந்து வருகின்றது. அதுவே, இஸ்லாமிய தமிழர்கள்மீதும் நிகழ்த்தப்பட்டு வருகின்றது.