தமிழீழத் தேசியத் தலைவர் மகன்
சார்லஸ் ஆன்டனி பெயர் ஏன் வந்தது…!

ஒரு இந்துவான பிரபாகரன் தமது மூத்த பிள்ளைக்கு சார்லஸ் ஆன்டனி என்று கிறிஸ்துவப்பெயர் சூட்டியதன் பின்னணி என்ன…?

சார்லஸ்ஆன்டனி என்பது பிரபாகரனின் மறக்க முடியாத நண்பனின் பெயர்.பிரபாகரனுடன் ஆயுதம் ஏந்திய போராளிதான் ஆன்டனி.
சுமார்25 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சாவகச்சேரி காவல்நிலையத்தைக் கைப்பற்றிய நிகழ்வுதான் ஜெயவர்த்தனே அரசாங்கத்துக்கு புலிகளை கண்டு மிரள வைத்தது.
சார்லஸ்ஆன்டனி தலைமையில் தான் அந்த கைப்பற்றல் சம்பவம் நடைபெற்றது.இயந்திரத் துப்பாக்கிகள் முழங்க காவல்நிலையத்தில் நுழைந்த சார்லஸ் அங்கு ஆயுதஅறை எங்கே எனத்தேடி அங்கிருந்த ஒரு ரிவால்வர்,28துப்பாக்கிகள்,2இயந்திர துப்பாக்கிகள் என இருந்ததை அள்ளிக்கொண்டு புலிப்படை வெளியேறியது.
இந்த அதிரடித்தாக்குதலால் ஆத்திரத்தில் இருந்த சிங்க இராணுவம் சார்லஸைத் தேடி அலைந்தது.யாழ்ப்பாணத்துக்கு அருகிலுள்ள மீசாலை என்ற இடத்தில் அவர் இருக்கும் தகவல் அறிந்து போய் இறங்கியது இராணுவம் பனைமரங்களுக்கு பின்னால் மறைந்திருந்தது.
அங்கு சார்லஸ்ஸும்,இன்னும் இரண்டு போராளிகளும் சிக்கிக்கொண்டனர்.

ஏற்கனவே கால் உடைந்து சிகிச்சைப் பெற்றிருந்த சார்லஸ்ஸால் அதிக தூரம் ஓட முடியவில்லை,நெஞ்சில் குண்டு பாய்ந்து விட்டது.ஆனாலும் உயிரோடு தான் பிடிபடக்கூடாது என்று நினைத்த சார்லஸ்ஆன்டனி என்னைக் கொன்றுவிடு எந்த புலியையும் இராணுவம் பிடிக்கக்கூடாது என்று சக போராளி அருணுக்கு உத்தரவு போட்டார்,அவர் தயங்கினார்.மீண்டும் கட்டாயப்படுத்தி கெஞ்சி சம்மதிக்க வைத்தார் சார்லஸ்,அழுதுக்கொண்டே சக போராளி அருண் சார்லஸ்ஸை சுட்டார்.
சார்லஸ்ஆன்டனியின் முடிவு கேள்விப்பட்டு பிரபாகரன் மிகவும் உடைந்து போனார்.மறக்கமுடியாத அந்த நண்பர் இறந்த காலம் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தனக்கு மகன் பிறந்த போது சார்லஸ்ஆன்டனி என்று நண்பனின் நினைவாக மகனுக்கு பெயர் சூட்டினார்.
இலங்கை இராணுவத்துக்கு பிரபாகரனும்,அவரது மகன் சார்லஸ் ஆன்டனியும் பெரிய சவாலாக அமைவார்கள் என்று யாருக்கு தெரியும்.
ஒரு சமயம் சார்லஸிடம் உனக்கு அம்மா பிடிக்கும்மா?அப்பா பிடிக்கும்மா என்று அவரது அத்தை கேட்ட போது சார்லஸ் சொன்னது அப்பாவை
சார்லஸ்ஆன்டனி அப்படியே அப்பாவின் சாயல் என்று பிரபாகரனின் சகோதரி சொல்கிறார்