thalaivaa

பிரபாகரன் என்ற இப்பெயருக்குதானே
பீரங்கிகளும் பின்வாங்கின..

இதோ உதடுகள் உன் பெயரை
உச்சரிக்கும் மறுகணமே
விரல்களுக்கு நடுவே
விருக்கென புகந்து விடுகிறது
வீரம்..

பிரபாகரன் என்ற
இப்பெயருக்குதானே
பீரங்கிகளும் பின்வாங்கின..

பிரபாகரன் என்ற இப்பெயர்
கேட்டால்தானே இப்பிரபஞ்சமே
பிரமித்து நிற்கின்றது..

வேங்கை உன் வீரம் கண்டு
சிறுநீர் கழித்தபடியல்லவா
சிதறி ஓடின
சிங்களத்து சிறு நரிகள்..

புரட்சி என்ற சொல்லுக்கு
புது ரத்தம் பாய்ச்சிய நீ
புலித்தலைவன் மட்டுமல்ல
எமைப் பொறுத்தவரை
இப்புவித் தலைவனும்கூட..

கட்டுப்பாடு ஒழுக்கம் தியாகம்
அர்பணிப்பு என்பதன் அர்த்ததை
நீ கட்டியெழுப்பிய படைகளிடமிருந்துததான்
கற்றுக்கொள்ள வேண்டும்..

உன் ஆயுதம் சிணுங்கியவரையில்
தன் ஆணவம் அடங்கியல்லவா
கிடந்தது சிங்கள ராணுவம்..

புரட்சியாளன் உன்
புகழ் பாடுவதில்
புல்லரித்து போகின்றது
என் புதுப்பேனா..

தலைவா உன் பிறந்தநாளே
தரணியில் எமக்கு சிறந்தநாள்
தமிழீழம் ஒன்றே நாம் உனக்கு
தர நினைக்கும் பரிசு..

தமிழீழம்தனை உனக்கு பரிசளிப்போம்
தடுப்பவரின் தலைகொய்து
பருந்துகளுக்கு பகிர்ந்தளிப்போம்…

#படித்ததில்_பிடித்தது

#தமிழரின்_தாகம்_தமிழீழ_தாயகம்
பிரபாசெழியன்.

(www.eelamalar.com)