தாயகம் திரும்பிய இளைஞன் கட்டுநாயக்காவில் கைது

சுவிஸர்லாந்திலிருந்து பல தசாப்தங்களுக்கு பின்னர் தாயகம் திரும்பிய இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஒக்ரோபர் 15 ஆம் திகதியான நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை இரவு சுவிட்ஸர்லாந்திலிருந்து வந்த இவரை விமான நிலையத்திலுள்ள ஸ்ரீலங்கா விஷேட குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்து தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

யுத்தம் காரணமாக ஏழு வயதில் பெற்றோருடன், சுவிட்ஸர்லாந்து சென்று அங்கு அரசியல் தஞ்சம் கோரியுள்ள யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சொந்த இடமாக கொண்ட தேவன் கமலீசன் 27 வருடங்களுக்கு பின்னரே தனது பூர்வீக நாட்டிற்கு திரும்பியிருக்கின்றார்.

குற்றப்புலனாய்வு பிரிவின் தடுப்பிலிருக்கும் தேவன் கமலீசனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு தற்போது அழைத்து வரப்பட்டுள்ளதாக அவர் சார்பில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்தார்.