உலகத் தமிழ் பேரவையின் தலைவர் இமானுவேல் இலங்கைக்கு வருகை!
உலகத்தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானு வேல் அடிகளார் நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படுத்தும் முகமாக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்த அவர் ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் திலக்மாரப்பன, நிதியமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள், பிரித்தானியா, கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மன் உள்ளிட்ட முக்கிய நாடுகளின் இராஜதந்திரிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
பின்னர் யாழ்ப்பாணத்து வருகை தந்துள்ள அவர் இங்குள்ள சமூக, பொருளாதார நிலமைகளை நேரில் ஆராய்வதாகவும், பல்வேறுபட்ட தரப்பினர்களையும்சந்தித்து வருகின்றார்.
அவரது பயணம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு செவ்வி வழங்கையில்,
நான் எனது மக்களுக்காக புலம்பெயர்ந்த மண்ணில் குரலெழுப்பி பல்வேறு செயற்பாடுகளையும் முன்னெடுத்து வந்தேன். கடந்த காலங்களில் எனக்கு இலங்கைக்கு வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. நான் இறுதியாக சுனாமி அனர்த்தம் இடம்பெற்றிருந்த சமயத்திலேயே இலங்கைக்கு வருகைதந்திருந்தேன்.
தற்போது ஆட்சி மாற்றம் இடம்பெற்றது. புதிய ஆட்சியாளர்களின் எமக்கு தெரிவித்த உறுதிமொழிகள் தொடர்பில நாம் தீவிரமாக ஆராய்ந்தோம். அவர்களிடத்தில் கடந்த கால அரசாங்கங்களிடத்திலிருந்து முன்னேற்றகரமானதொரு சிந்தனையும் தமிழ் மக்கள் தொடர்பான ஆழமானதொரு கரிசனையும் இருப்பதை அவதானித்தோம்.
அத்துடன் இலங்கை அரசாங்கம் சர்வதேச நாடுகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடத்திலும் வழங்கிய உறுதிமொழிகளையும் அவதானித்தோம். அதன் பின்னர் அவர்கள் எம்முடனும் (உலகத்தமிழர் பேரவையுடனும்) பேச்சுவார்த்தகளை நடத்தியிருந்தனர். இரண்டு சந்தர்ப்பங்களில் அப்போதிருந்த வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர எம்மை இலங்கைக்கு வருகை தருமான அழைப்பினை விடுத்திருந்தார்.
குறிப்பாக நாம் அரசாங்கத்தின் முற்போக்கான செயற்பாடுகளுக்கு ஆதரவினை வழங்கி வருவதோடு தேயைான இடங்களில் எமது சுட்டிக்காட்டுதல்களையும் மேற்கொண்டு வருகின்றோம்.
அந்தவகையில் இறுதியாக நடைபெற்றிருந்த வௌ்ளப் பெருக்கு மண்சரிவு அனர்த்தத்தின் போது நாம் 18இற்கும் அதிகமான வைத்தியர்களை அவரசசிகிச்சைகளை வழங்குவதற்கு அரசாங்கத்திற்கு உதவியளிப்பதற்காக அனுப்பிவைத்திருந்தோம்.
இந்நிலையிலேயே நான் அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்றுக்கொண்டும் நல்லெண்ண சமிக்ஞையை வௌிப்படுத்தும் வகையிலும் தற்போது அரசியல், பொருளதார ரீதியாக காணப்படுகின்றன கடுமையானதொரு சூழலை நேரில் ஆராய்வதற்குமாகவும் இலங்கைக்கு வருகைதந்துள்ளேன்.
சில தினங்களாக கொழும்பில் தங்கியிருந்தபோது பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்திருந்தேன். இருப்பினும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநயக்கா, இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோரைச் சந்திப்பதற்கு வாய்ப்புக்கள் கிட்டியிருக்கவில்லை. விரைவில் அவர்களையும் சந்திக்கவுள்ளேன்.
தற்போது எனது தாயக பூமியல் சுமார் 21 ஆண்டுகளுக்கு பின்னர் தங்கியிருந்து இங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்து வருகின்றேன். இங்கும் பலதரப்பட்ட மக்களை எனது உறவிர்களையெல்லாம் நாள்தோறும் சந்தித்து கலந்துரையாடி வருகின்றேன். எமது மக்களின் எதிர்காலம் தொடர்பான சிறந்ததொரு திட்டமிடலுக்கு இது வலுவானதாக இருக்கும் என்றும் நம்புகின்றேன் என்றார்.