தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா
வரலாற்று பிரசித்தி பெற்ற தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா 27.08.15 இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.
இன்று அதிகாலை ஆரம்பமான விஷேட பூஜை வழிபாடுகளை அடுத்து காலை 8 மணிக்கு வசந்த மண்டப பூஜை ஆரம்பமானது.
அதனை தொடர்ந்து உள் வீதி உலா வந்த துர்க்கை அம்மன் காலை 9 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருள் காட்சி அளித்தார்.
கடந்த 17ம் திகதி I(17.08.15) கொடியேற்றத்துடன் மகோற்சவ திருவிழா ஆரம்பமானது.
தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்ற திருவிழாவை அடுத்து 27.08.15 இன்று வியாழக்கிழமை தேர்த்திருவிழா இடம்பெற்றது.
வெள்ளிக்கிழமை தீர்த்த திருவிழா இடம்பெறவுள்ளது.