நந்­திக்­க­ட­லில் மெளனித்த போராட்­டம் உயிர்­பெ­றும்

எதிர்­வ­ரும் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் அரச தரப்பு வெற்­றி­பெற்­றால் நந்­திக்­க­ட­லில் மௌனிக்­கச் செய்­யப்­பட்ட தமிழ் பிரி­வி­னை­வா­தப் போராட்­டம் மீண்­டும் உயிர்­பெ­றும்.

இவ்­வாறு மகிந்த அணி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விமல் வீர­வன்ச தெரி­வித் தார்.

அவர் தெரி­வித்­த­தா­வது-:

பெப்­ர­வரி 10ஆம் திகதி மக­ர­கம நகர சபை இல­கு­வாக தன்­வ­ச­மா­கி­வி­டும் என்று சில தரப்­பு­கள் வேடிக்கை பார்த்­தன. ஆனால் அவர்­க­ளுக்­குத் தற்­போது ஏமாற்­றம் கிட்­டி­யுள்­ளது. பெப்­ர­வரி 10 ஆம் திகதி இடம்­பெ­ற­வுள்­ளது குட்­டித்­தேர்­தல்.

இது சாதா­ரண தேர்­தல் என்று கூறிக்­கொண்­டா­ லும் இந்­தத் தேர்­தல் இலங்­கை­யின் தலை­யெ­ழுத்­தைத் தீர்­மா­னிக்­கும் தேர்­த­லாக அமை­யும் என்­பதே உண்­மை­யான விட­ய­மா­கும். நாடு பிள­வு­ப­டுமா, இல்­லையா என்ற தீர்­மா­னம் மக்­க­ளால் வழங்­கப்­ப­டும்.

நாட்­டின் தலை­வி­தி­யு­டன் பிணைந்த இந்­தத் தேர்­தல் பிரி­வி­னை­வாத அர­ச­மைப்­பைக் கொண்டு வரு­வதா, இல்­லையா என்­பதை தீர்­மா­னிக்­கக்­கூ­டிய தேர்­த­லா­கவே அமை­யும். இந்­தத் தேர்­த­லில் தவ­று­விட்­டால் தமிழ் ஈழத்­துக்கு வழி திறக்­கப்­ப­டும்.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்­றும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்­தி­ரன் ஆகி­யோ­ரால் உரு­வாக்­கப்­ப­டும் அர­ச­மைப்­பால் செய்­யப்­ப­டும் அதி­கா­ரப் பர­வ­லாக்­கத்­தில் எதிர்­கா­லத்­தி­லும் மாற்­றம் செய்­ய­மு­டி­யாது.

நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல் தேசத்­தின் தலை­வி­தி­யைத் தீர்­மா­னிக்­கும் தேர்­த­லா­கக் கரு­தப்­ப­ட­வேண்­டும்.

நந்­திக்­க­ட­லில் முற்­றுப்­பெற்ற போருக்கு வைக்­கப்­பட்ட முற்­றுப்­புள்ளி தொடர்ந்­தும் நீடிக்க வேண்­டு­மா­யின் தேர்­த­லில் தாமரை மொட்­டுக்கு வாக்­க­ளிக்­க­வேண்­டும்.

இல்­லா­வி­டின் நந்­திக்­க­ட­லில் மௌனிக்­கச் செய்­யப்­பட்ட தமிழ்ப் பிரி­வி­னை­வா­தப் போராட்­டத்­துக்கு மீண்­டும் உயிர் கொடுப்­ப­தாக அமைந்­து­வி­டும் என்­றார்.