மைத்திரியுடனான சந்திப்பு ஏற்கனவே திட்டமிட்டது – சட்டத்தரணி குமரகுருபரன்!

சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன திடீரென தனது மெய்ப்பாதுகாவலர்களுடன் இறங்கிவந்து போராட்டக் காரர்களைச் சந்தித்தார் என்பது பொய்யெனவும், இச்சம்பவம் மக்களுக்கும், சர்வதேசத்திற்கும் காட்டுவதற்காக நன்கு திட்டமிட்டு நடிக்கப்பட்ட நாடகம் எனவும் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில் தெரிவித்திருப்பதாவது,

“சனாதிபதி மைத்ரிபால சிறிசேன திடீரென்று, அவரது பாதுகாப்பு தரப்பினரும் எதிர்பாராத வண்ணம், வாகனத்தில் இருந்து இறங்கி வந்து போராட்டக்காரர்களை சந்தித்தார் என்று சொல்வதெல்லாம் சுத்தப் பம்மாத்து. எந்தவொரு அரச தலைவரும் தனது பாதுகாப்பு தொடர்பில் அப்படி அக்கறையற்று இருக்க அவரே நினைத்தாலும் முடியாது. ஆகவே இந்த மாதிரியான ‘photo opportunity’ தருணங்கள் எல்லாம் முற்கூட்டியே திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றன என்பதனை அறிக. ஏரிக்கரைப் பத்திரிகையான சண்டே ஓப்செர்வர் ‘President Walks into Jaffna Protest: Explains Government Position and Calms Protesters’ என்று தலைப்பிட்டிருந்தமை இந்த photo opportunity அரசியலின் நீட்சி என்றும் அறிக. இதிலே ‘போராட்டக்காரர்களை மைத்திரி சமாதானப்படுத்தினார்’  என்ற வாசகத்தை காண்க.

தமிழ் மக்களுக்கும் சரி சர்வதேசத்திற்கும் சரி ‘engage’ பண்ணுகிறேன் (பேசுகிறேன், கேட்கிறேன்) என்று காட்டினால் போதும் என மைத்திரி நம்புகிறார். சர்வதேசத்திற்கு போதும் தான். முகப்புத்தக பதிவுகளைப் பார்த்தால் தமிழ் மக்களுக்கும் இந்த பெரிய மனசுக்காரன் இமேஜ் போதும் போல இருக்கு.

நல்லிணக்கம் = கட்டிப்பிடி வைத்தியம் = மருத்துவ முத்தம்.

நல்லிணக்கம் வாழ்க.”