நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபன் நினைவுத்தூபியின் புனிதத்தன்மையினையும் பேணவேண்டிய அவசியம்!

நல்லூர் திருவிழா காலத்தில் போது எமது பண்பாட்டு கலாசாரம் என்பன எவ்வாறு பேணப்படவேண்டும் என்ற தேவையுள்ளதோ அதே போல் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபன் நினைவுத்தூபியின் புனிதத்தன்மையினையும் பேணவேண்டிய அவசியம் உள்ளது.

கடந்த திருவிழாக்காலங்களில் இத்தூபி உணவு உட்கொள்வர்களினதும், ஐஸ்கிறீம் குடிப்பவர்களினதும், இளைப்பாறுபவர்களின் அமைவிடமாக இருந்தது.

இதனை கருத்திற்கு கொண்டு அதன் மகத்துவத்தினை, அதன் புனிதத்தினை பாதுகாக்கும் நோக்குடன் அதனை துப்பரவு செய்து அதனைச் சுற்றி வேலியமைக்க வேண்டும் என்று நேற்றைய யாழ்.மாநகர சபை அமர்வின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பாத்திபனால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இன்றே அதற்கான பணிகளை யாழ் மாநகர சபை தொடங்கியுள்ளது.