”நாங்கள் தமிழீழம் கோரவில்லை” என்கிறார் சம்பந்தன்!

தாங்கள் தமிழீழத்தை கோரவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் 29.01.18 புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற போது அவ் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த தீர்வையும் தாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.