உண்ணாநிலையின் உன்னதம் திலீபன்

“நாங்கள் வன்முறையின்பால் நாட்டம் கொண்டவர்களல்ல, வன்முறைதான் எங்கள்மீது வலிந்து திணிக்கப்படுகின்றது, அந்த வன்முறையிலிருந்து எம்மக்களை காக்கவே நாம் ஆயுதமேந்தினோம்.எம்மக்களுக்கான தீர்வு எமது உரிமை அகிம்சை வழியில் கிடைக்குமாயின் அதைநாம் முழுமனதாக வரவேற்கின்றோம்”

என்ற தேசியத் தலைவரின் வாக்கை மெய்பிக்க 12நாட்களாக உயிரை திரியாக்கி இலட்சியத்தை உணவாக்கி எரிந்த தீபம் இன்று அணைந்துவிட்டது.வல்லாதிக்கம் அதை அணைத்துவிட்டது.

அதுவரை நான் கடவுளாக நம்பிகொண்டிருந்த நல்லூர் கந்தன் வெறும் கற்சிலையாகவும் போராளி திலீபன் அண்ணா கடவுளாகவும் எனக்குள் தோன்றியநாள்.

34ஆண்டுகள் உருண்டோடிவிட்டது தாகம் மட்டும் தீரவில்லை திலீபன் இன்றும் பசியோடுதானிருக்கின்றார்.

 மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
-பிரபாசெழியன்.